India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை, அழகர்கோவில் மலைப்பாதை இன்று மூடப்பட்டது. அழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று ஒரு நாள் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. முன்னறிவிப்பு இன்றி, அழகர்கோவில் மலை சாலை மூடப்பட்டதால், மலை மீது உள்ள பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் போன்றவற்றிற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜ பெருமாள்(36). இவர் அவருடைய மகளை, தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய நிலையில் அப்பெண் கர்ப்பமடைந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான காவலர் குழுவினர் இன்று 15.05.2024 ராஜ பெருமாளை போக்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூரில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மக்கினம்பட்டியில் 5செ.மீ, சூலூரில் 4செ.மீ, தொண்டாமுத்தூர், வால்பாறை PAP, ஆழியார், வால்பாறை தாலுகா அலுவலகம், ஆனைமலை தாலுக்கா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 3செ.மீ, விமான நிலையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 2செ.மீ, வாரப்பட்டி, கோவை தெற்கு, TNAU, பில்லூர் அணை, சோலையார் ஆகிய பகுதிகளில் 1செ.மீ பதிவானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தங்கச்சிமடம் பகுஹ்டியில் 5செ.மீட்டரும், முதுகுளத்தூர், தொண்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், ஆர்.எஸ். மங்கலம், கடலாடி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிளானிலை, வம்பன் KVK AWS, பெருங்களூர் மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

பெண் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் இன்று தற்போது திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 3 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது கோவையிலிருந்து போலீசார் தன்னை அழைத்து வரும்போது தாக்கியதாக கூறினார். அதன் காரணமாக அவருக்கு உடல் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டதன் பெயரில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3வது முறையாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும், திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை அச்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 5 செ.மீட்டரும், ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 4 செ.மீட்டரும், சாத்தூர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சிவகாசி , அருப்புக்கோட்டை, காரியபட்டி ஆகிய பகுதிகளில் 1செ.மீட்டரும் மழை அளவு பதிவானது.

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுருநாதன் என்பவர் தனது ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் சந்தோஷ் குமார் என்பவரிடம் லஞ்சமாக 15,000 பெற்றுள்ளார்.அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொண்டனர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில பட்டுக்கோட்டையில் நேற்று (மே.14) நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது முறையாக பராமரிக்காத 17 வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப் பட்டது. பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி திடலில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த 32 தனியார் பள்ளிகளில் உள்ள 218 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.