Tamilnadu

News April 18, 2024

முதியவரை காப்பாற்றிய தலைமை காவலர்

image

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு ஏதுமின்றி சாலையோரம் முதியவர் ஒருவர் படுத்து கிடந்துள்ளார். மயிலம் காவல் நிலைய தலைமை காவலர் சங்கரன், அவருக்கு தேவையான உணவுகளை வாங்கி கொடுத்து தனது சொந்த செலவில் இன்று சொந்த ஊரான ஆத்தூர் அடுத்த சிறுவாச்சூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 18, 2024

நாகை: வாகனங்களுக்கு தடை விதித்து உத்தரவு

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை அழைத்து வருவதற்கும் பின் அழைத்து செல்வதற்கும் வேட்பாளர்களோ அவரது முகவர்களோ வாகனங்களை பயன்படுத்தினால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜானிடாம் வர்கிஸ் எச்சரித்தள்ளார்.

News April 18, 2024

சித்திரை திருவிழா: ஐகோர்ட் உத்தரவு 

image

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது அழகர் வேடமணிந்த பக்தர்கள் ஆட்டு தோலினாளான பையில் நறுமண நீரை நிரப்பி தங்க குதிரை வாகனத்தில் வரும் கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பர். இவ்வாறு வேடமணிந்து நறுமண நீரை பீய்ச்சி அடிக்கும் பக்தர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்ய வேண்டும் என்ற மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டது.

News April 18, 2024

திண்டுக்கல்: ஆட்சியர் ஆய்வு!

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இன்று (18.04.2024) ஆய்வு மேற்கொண்டார்.

News April 18, 2024

கோவை: மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர்

image

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சகோதரரை மீட்டு தரக்கோரி விவசாயி திருமலை என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் காவல்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 18, 2024

கள்ளக்குறிச்சி: கட்டாயம் வாக்களிக்க அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அனைவரும் கட்டாயமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 18, 2024

நாங்குநேரியில் ரூ. 33 லட்சம் வழிப்பறி

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முருகன் என்பவரிடம் நேற்று
(ஏப். 17) இரவு 8 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த ரூ. 33 லட்சத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் மீது நாங்குநேரி போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News April 18, 2024

தூத்துக்குடி: 91.5% பூத் ஸ்லிப் விநியோகம்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள 1,624 வாக்குச்சாவடிகளில் 14.58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு இதுவரை 91.5% பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்களுக்கு வாக்குச்சாவடியில் நிலை அலுவலர்களால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

image

மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

தி.மலை: காங்கிரசில் இணைந்த பாஜக நிர்வாகி

image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். செங்கம் G.குமார் முன்னிலையில் பாஜக தொழிலாளர் பிரிவு மாவட்டத் செயலாளர் ரமேஷ் இன்று காங்கிரசில் இணைந்தார். இதில், காங்., நகர தலைவர் காந்தி, வட்டாரத் தலைவர்கள், மற்றும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு CS ரமேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாஜக நிர்வாகியின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

error: Content is protected !!