India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை இந்த மாதம் தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்காக பள்ளி வாகனங்களை பராமரிக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டிய கடமை அவற்றை வளர்ப்பவர்களுக்கு உள்ளது; கால்நடைகளுக்கு நாள்தோறும் 4 முதல் 5 முறை குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அப்போதுதான் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோயிலில் மாரியம்மன், புற்று வடிவில் காட்சிதருகிறார். இது தஞ்சாவூர் அரண்மனைக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஒரு தீர்த்தக் குளமும் உள்ளது. சோழர் மற்றும் மராட்டிய காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இங்கு பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுகிறது.

தாமரைக்குளம் அருகே வலங்காபுரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றார். அங்கு அங்கு உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் நடந்துவந்தார். இதனால், மணிகண்டன் மனைவி முகம் சுழித்தார். இதனை கண்டித்த மணிகண்டனை, கேதீஸ்வரன் (24) மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லை மாநகர சீவலப்பேரியை சேர்ந்த பேச்சிமுத்து நேற்று (மே 2) தனது மனைவி பேச்சியம்மாளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பேச்சியம்மாள் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று (மே 3) நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிக்னலில் இருக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கான தோ்வு போட்டிகள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 6, 7, 8, 9, 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான தோ்வு 10ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவர்களுக்கும், 11ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவிகளுக்கும் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

உதகை அருகே மசினகுடி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. தாவரங்கள், புல்வெளிகள் காய்ந்து நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தீவனம் இல்லாமல், தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாமல் மாடுகள் அங்குமிங்கும் அலைகின்றன. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 15 மாடுகளுக்கு மேல் இறந்தன. அங்கு ஒரு குவாரி பகுதியில் நேற்று (மே 2) மட்டும் 5 மாடுகளின் உடல்கள் கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்து கைதான மகள் ஆர்த்தியுடன் 2 ஏட்டுகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்த்தியின் பிரச்னைகளை 2 போலீசாரும் தீர்த்து வைத்ததாகவும், இந்த கொலை வழக்கை நீர்த்துப் போக அவர்கள் முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட காவல்துறையினர் மேற்படி ஏட்டுகளிடம் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.