Tamilnadu

News April 3, 2024

மயிலாடுதுறை: சிறுத்தை விவகாரம்..விடுமுறை

image

மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் இன்று (ஏப்.3) சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை காவல்துறை தெரிவித்துள்ளது.

News April 3, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2024

தி.மலை:முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் திருவண்ணாமலை முழுவதும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 3, 2024

புதுவை வருகிறாா் பிரதமா் மோடி

image

புதுவை இந்திரா காந்தி சிலை சதுக்க பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் செல்வகணபதி எம்.பி.நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தத் தோ்தலில் நமச்சிவாயம் வென்றால் அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக புதுவைக்கு வருகிறாா். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேதி விரைவில்அறிவிக்கப்படும்” என கூறினார்.

News April 3, 2024

திருச்சி: வாகனசோதனையில் 17 வழக்குகள்

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி தொகுதியில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அரசியல் கட்சியினர் மீது இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ,தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட வாகன சோதனையில், நேற்று வரை ,1 கோடியே 47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News April 3, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஒருவர் குத்தி கொலை

image

ஶ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(42). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரிமுத்து தனது வீட்டிலிருந்து கை காட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்தபோது, மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.அவர் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 3, 2024

மதுரையில் பலத்த பாதுகாப்பு..!!

image

மதுரையில் நாளை மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் காலை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்கூட்டம் நடைபெறும் பழங்காநத்தம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் இன்று முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 3, 2024

புகையிலை கடத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு

image

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அடுத்த வஞ்சரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முகமதியர்பேட்டை கிராம பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News April 3, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ். பி நேரில் ஆய்வு

image

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  நீடாமங்கலம், ஒளிமதி ஆகிய பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று (02.04.2024) இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் பார்வையிட்டார்.

News April 3, 2024

நாமக்கல்: 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.3) முதல் அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை, வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும், காற்று மணிக்கு முறையே 8 கீ.மீ முதல்10 கீ.மீ., வேகத்தில் தென் கிழக்கு திசையில் இருந்து வீசும் என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!