India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதத்துக்கு முன்பு பிறந்த குழந்தை வசந்தியை பெற்றோர் வளர்க்க விருப்பம் இல்லாமல் குழந்தை நலக்குழுவில் ஒப்படைத்தனர். குழந்தை தொடர்பாக யாரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொக்கிரகுளம் திருநெல்வேலி என்ற முகவரியில் 30 நாட்களுக்குள் அணுகும்படி மாவட்ட ஆட்சியர் நேற்று (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் முன்னாள் அமைச்சர் பா. மோகன் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், தேர்தல் பொறுப்பாளர் பிரபு கலந்து கொண்டனர்.

பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கானா பாடகர் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். ஜக்காம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அன்பு தனது சொந்த வேலை காரணமாக மேல்மருவத்தூர் சென்று திரும்புகையில் சலவாதி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை ரோசனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு பிராமண சங்கம் ஓசூர் கிளை சார்பில் சுவா சினி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து ஆரம்பித்த இந்த பூஜை கன்யா பூஜை, குத்துவிளக்கு பூஜை, சுவாசினி பூஜையுடன் இனிதே நடைபெற்றது. தாம்பிராஸ் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர் குகை சுவாமிகள் ஸ்ரீ சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, சமூக ஊடகப் பேரவை (பாமக)மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று(மார்ச் 24) அவரது இல்லத்தில் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், அரசியல் களத்தில் ஊடகப் பேரவையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாநிலப் பொறுப்பாளர்கள் செயல்திட்டங்களை வகுத்து கொடுத்தனர். இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்டு குமரிக்கு அழைத்து வந்தார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எம்பி நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.