Tamilnadu

News April 3, 2024

தொழிற்சாலை உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

image

வேலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (மார்ச் 2) ஆம்பூர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரபீக் அகமது, ஆம்பூர் ஜமாத் தலைவர் அஷ்வக்அகமது ஆகியோர் சந்தித்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

குமரி: கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு துவக்கம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
குமரி மாவட்ட பிரிவு சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இந்த பயிற்சி ஜூன் 26ம் தேதி வரை 6 கட்டங்களாக நடத்தப்படுகிறது. நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம். நீச்சல் குளத்தில் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தனித்தனியே நடத்தப்படுகிறது. என மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

பங்குனித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு

image

திருப்பத்தூா் அருகே குமாரப்பேட்டையில் உள்ள  பூமலச்சியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கிராம பொதுமக்கள் பூமலச்சியம்மன் கோயிலில் அபிஷேக, ஆராதனைகளை மேற்கொண்டு ஊா்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவுக்கு வந்தனா். அங்கிருந்த காளைகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செய்தனா். தொழுவிலிருந்து 50 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன .

News April 3, 2024

புகலூர் அருகே மதுவிற்ற பெண் கைது

image

கரூர் மாவட்டம் புகலூர் அருகே வேலாயுதம்பாளையம் காவல் நிலைய பகுதியில் போலீசார் நேற்று(ஏப்.,2) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னச்சத்திரம் அறிய பெரிய ரங்கபாளையத்தைச் சேர்ந்த வளர்மதி என்பவர் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 3, 2024

கோவை – ஜபல்பூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

கோவை – ஜபல்பூர் சிறப்பு வாராந்திர ரயில் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “கோவை – ஜபல்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

News April 3, 2024

திருச்சி: ஆக்ரோஷமான செங்குளத்தான் அருள்வாக்கு

image

திருச்சி புத்தூர் அடுத்த உறையூர் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு செங்குளத்தான் கருப்பசாமி அரிவாள் மீது ஏறிய மருளாளி சுவாமி அருளுடன் வீதியில் ஆடி, பக்தர்களின் மனக்குறைகளைப் போக்க பரிகாரம் அருள் வாக்கு கூறினார். இதையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

கடற்கரையில் குளித்தவர்களுக்கு நூதன தண்டனை

image

புதுச்சேரியில் பல இடங்களில் “குளிக்க தடை” என்ற எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வாலிபர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதைகண்ட, ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்து சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று எச்சரிக்கை பலகையில் எழுதியுள்ளதை படித்த பின்னர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

News April 3, 2024

கவர்னர் ஊட்டி ரயிலில் திடீர் பயணம்

image

தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தனது குடும்பத்துடன் ஊட்டி ராஜ்பவனில் தங்கி வருகிறார். நேற்று (ஏப். 2) இவர் குடும்பத்துடன் ஊட்டி ரயில் நிலையம் சென்றார். பின்னர் குடும்பத்துடன் ரயிலில் ஏறி, குன்னூர் சென்றார். கவர்னர் வருகையை ஒட்டி ஊட்டி மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

News April 3, 2024

ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்குள் (அடுத்த 3 மணி நேரத்தில்) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News April 3, 2024

நெல்லையில் இன்று வெயில் கொளுத்தும்

image

திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (ஏப்ரல் 3) விடுத்துள்ள அறிக்கை: நெல்லையில் வெயில் கொளுத்தும்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 100°F வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!