India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் 3 நாட்களாக நகர்புற பகுதியில் ஊலா வரும் சிறுத்தையைப் பிடிக்க 3 கூண்டுகள் அமைத்தும், சிறுத்தை சிக்காததால் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது சிறுத்தையைப் பிடிக்க கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் வருகைப் புரிந்துள்ளார். மேலும் சிறுத்தை தென்பட்ட பகுதிகளில் 8 மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று குற்றவாளியை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே இன்று மதியம் இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இருசக்கர வாகனம் சேதமடைந்தது. தகவல் அறிந்த அங்கு வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரபாண்டி அருகே தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் சர்வேஷ் (36). இவர் வீரண் என்பவருடன் நேற்று இரவு வீரபாண்டி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் சர்வேஷின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு ரூ.1000 பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதையடுத்து தகவலின் பேரில் தனசேகரன் (20), சிம்பு (20) ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 41.2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கரூரில் வெப்பம் 41.5 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு, தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையை வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு விடுமுறை தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதை தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாடு அறைக்கு 94453-98752, 0422-2241136, 99426-64066 தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.