Tamilnadu

News April 10, 2024

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஐடி ரெய்டு

image

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்துவருபவர் ஜெயக்குமார், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) காலை முதல் இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 10, 2024

ராமநாதபுரம்: மாணவியை அடித்த ஆசிரியை மீது வழக்கு

image

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியை அடித்ததில் கால் வீக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தாயார் லெட்சுமி அளித்த புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் பள்ளி ஆசிரியை ஜெயப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2024

கிருஷ்ணகிரி: நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

image

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இங்கு பேனாவையே கையில் பிடிக்க முடியவில்லை. டெல்லியில் டைனோசரைப் பிடிக்கிறாராம் என்று கிண்டலாகத் தெரிவித்தார். மேலும், ஆளும் திமுகவை விமர்சித்துப் பேசினார். நிகழ்ச்சியில் விந்தியாவை காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.

News April 10, 2024

இஸ்லாமியர்களிடம் வாக்கு கேட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள்

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்.10) கோவை ஆத்துப்பாலம் பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களிடம், பொள்ளாச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலையூர், காவிரிப்பூம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல் தேர்தல் பார்வைையாளர் ஜன்மே ஜெயாகைலாஷ், மாவட்ட எஸ்பி மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

News April 10, 2024

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. நேற்று முன்தினம் மாலை புதிய பைக் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது பெரியகாட்டுசாகை மின்துறை அலுவலகம் அருகே நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 10, 2024

கள்ளழகர் திருவிழா: தண்ணீர் திறக்க திட்டம்

image

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெறும் போது, வைகை அணையில் போதுமான நீர்இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 23-ந் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. தற்போது வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக, வைகை அணையில் இருந்து 19ந் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

News April 10, 2024

ராமநாதபுரம்: நாளை ரம்ஜான் சிறப்பு தொழுகை

image

30 நாள் நோன்பு முடிவில் நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன்படி ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா கோரி தோப்பு மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் சிறப்பு தொழுகை மேற்கொள்ள உள்ளனர்.

News April 10, 2024

கீழ்வேளூர் அருகே தேரோட்டம் ‌

image

கீழ்வேளூர் அருள்மிகு அஞ்சு வட்டத்தம்மன் உடனுறை அட்சய லிங்கசாமி ஆலய தேர் திருவிழா இன்று விமர்சையாக துவங்கியது. முன்னதாக தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது‌. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News April 10, 2024

சீர்காழி அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

image

சீர்காழி, கீழமாத்தூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்ந கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதிகளும் சரிவர கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வருகின்ற மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!