India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், துத்தியேந்தல் கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்தில் தபால் வாக்களிப்பதை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற
தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் 1,722 பேர், மாற்றுத்திறனாளிகள்
1,844 பேர் என 3,566
வாக்காளர்களுக்கு
தபால் வாக்கு இன்று
முதல் ஏப்.9 வரை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது .

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரி என்ற நபர் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை இன்று கள்ள சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவினால், குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 5) காலை 8 மணி முதல் நாங்குநேரி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். மூன்றடைப்பு, தோட்டாக்குடி, அனைப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

வார இறுதிநாள், அமாவாசை மற்றும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளதாக சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகள் வசதிக்காக வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த சென்னை – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை வாரம் மும்முறை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது முதல் ஏப்ரல் 28 வரை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த ரயில் சேவை தொடர உள்ளதாக மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இன்று இல்லம் தேடி வாக்கு பெறப்பட்டது. கண்ணமங்கலம் பகுதியில் உள்ள வயது முதிர்ந்த வாக்காளர்கள், வாக்குச்சீட்டு முறையில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வாக்குப்பதிவு பெட்டியில் போட்டனர். பலத்த பாதுகாப்புடன் வாக்கு சீட்டு முறை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் இப்போதே அக்னி நட்சத்திர தாக்கம் போல் கொளுத்துகிறது. இன்றும் (ஏப்ரல்.5) காலை முதல் வெயில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இன்று பிற்பகல் 1.15 மணிக்கு தென்காசி நகரப் பகுதியில் வெப்ப பதிவு 101 டிகிரியாக உயர்ந்தது. சுட்டெரித்த வெயிலில் சாலையில் நடந்து சென்றவர்கள் புழுக்கத்தில் தவித்தனர்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, ‘நாங்கள் இருக்கிறோம் பயப்படாமல் ஓட்டு போடுங்கள் ‘ என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில், கூடலூர் பஜாரில் நேற்று (ஏப். 4) போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. கூடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த குமார் தலைமை தாங்கினார்.

கடந்த 2018 இல் இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மதுரையைச் சேர்ந்த ராஜாஜி, பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் கைதான பாண்டி, ராஜாஜி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில், திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.