Tamilnadu

News April 21, 2024

கள்ளக்குடி: தேர்தல் புறக்கணிப்பு-வெளியான முக்கிய தகவல்

image

கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை.  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

ராமநாதபுரம்; ஒபிஎஸ் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

image

நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, “அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்டி வாழ வேண்டும் என்கிற அறநெறியைப்
பரப்பிய பகவான் மகாவீரர் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த இனிய நாளில்,அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள உறுதி ஏற்போம்” என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

விருதுநகர் அருகே பெண் மீது தாக்குதல் 

image

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் பூமிநாதன் என்பவர் வந்து மனைவி நாச்சி (46). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் தங்கப்பாண்டி குடும்பத்தார் ஐந்து பேர் சேர்ந்து நாச்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. டவுன் போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2024

திருச்சி அருகே விபத்து;மரணம் 

image

அரியமங்கலத்தை சேர்ந்த தனுஷ்ராஜ் (22). தனது நண்பரான தென்னூர் பாரதி நகரை சேர்ந்த மணிகண்டனுடன் நேற்று டூவீலரில் சென்றபோது, எதிரில் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சரண் (22), தனது நண்பரான சச்சினுடன்(22) டூவீலரில் வந்த டூவீலர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த தனுஷ்ராஜ் , மணிகண்டன், சச்சின் ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார் .

News April 21, 2024

சத்துவாச்சாரியில் வராகி அம்மன் ஆலயம்

image

வேலூர் சத்துவாச்சாரி பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாலை கெங்கைம்மன் ஆலயத்தில் 21.4.2023 இன்று காலை 7.30 மணி முதல் 9.மணிக்குள்
ஸ்ரீ வராஹி அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர், இதற்கு முன்பு வராகிய அம்மனின் அருளை பெற சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்று தரிசிக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் பக்தர்கள் மகிழ்ச்சி.

News April 21, 2024

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பழனி,ஒட்டன்சத்திரம்,ஆத்தூா்,நிலக்கோட்டை, நத்தம்,திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,812 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அந்த வளாகம் முழுவதிலும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

News April 21, 2024

தூத்துக்குடி: ரவுடி அடித்துக் கொலை

image

தூத்துக்குடி அருகே உள்ள ஆர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவுடி மாரியப்பன். நேற்று மாலை ஜாகிர் உசேன் நகரில் ஒரு முட்புதரில் நண்பர்களுடன் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 21, 2024

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை

image

கடலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை ஆணையர் உத்தரவின்படி,மகாவீர் ஜெயந்தி ஆன இன்று மற்றும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஆகிய 2 நாட்கள்,கடலூர் மாவட்டத்தில் அரசு மதுபான கடை மற்றும் மதுபான கடையுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்படுகிறது.மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது

News April 21, 2024

கிருஷ்ணகிரி: டிராக்டர் மோதி மாணவன் உயிரிழப்பு

image

போச்சம்பள்ளியை அருகே உள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் கணபதி(13), அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சாணாங்கொல்லை பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது வழியாக வந்த டிராக்டர் மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணபதியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கணபதி பரிதாபமாக உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 21, 2024

ஜெயந்தன் பூஜை குதிரை வாகனத்தில் பைரவர்

image

திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் யோகநிலையில் மூலவர் பைரவருக்கு ஜெயந்தன் பூஜை நடைபெற்றது. நேற்று காலை பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் யோக பைரவர் திருவீதி உலா வந்தார்.

error: Content is protected !!