India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இன்று அதிமுகவின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சரும், தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று அதிமுகவின் ஆட்சிக்கால திட்டங்களை முன்வைத்து தீவிர வாக்கு சேகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சிபிஐஎம்எல் முடிவு செய்துள்ளது. நெல்லையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 25) இரவில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ரமேஷ் ஆகியோர் சென்று மாவட்ட செயலாளர் மைதீன் கானை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நேற்று (மார்ச் 25) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இருந்தாலும் எனக்கு அறிமுகம் கொடுத்தது அதிமுகதான் எனவே தேர்தல் சுவரொட்டிகளில் பிரதமர் மோடி எம்ஜிஆர் அண்ணாமலை போன்றவர்களின் படங்கள் இடம்பெறும் என்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மாா்ச் 26) தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 17ஆயிரத்து 978 பேர் எழுதுகின்றனா் . தேர்வை கண்காணிக்கும் பணிகளில் 103 முதன்மை கண்காணிப்பாளா்கள், 103 துறை அலுவலா்கள், வழித்தட அலுவலா்கள், பறக்கும்படை குழுவினா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதனிடையே பல்வேறு மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அருப்புக்கோட்டை கட்ட கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் காவியா(24). இந்நிலையில் நேற்று (25.3.24) காவியா வீட்டில் இருந்த நாய் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவரின் நாயை பார்த்து குலைத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த வல்லரசு கம்பியால் காவியா வீட்டில் இருந்த நாயை அடித்து கொன்று விட்டதாகவும், மேலும் காவியா & அவரது அத்தைக்கு வல்லரசு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்

பெட்டவாய்த்தலை அருகே காவல்காரப்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்.திருச்சிக்கு கடந்த 20-ந் தேதி தனது மனைவி பார்வதி மகன் கோகுல் ஆகியோருடன் பைக்கில் சென்ற போது எதிரே வந்த 108ஆம்புலன்ஸ் மோதியதில் ஜெகநாதன்,பார்வதி நிகழ்விடத்திலேயே இறந்தார்கள்.இந்நிலையில் திருச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கட்கிழமை வார காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமத்தில் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி ஆலய ஆணி உத்தர திருவிழா வருகிற 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இந்த திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால் வருகிறது 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பதாவது- 2023 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேரவும், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் விண்ணப்பங்கள் மே 24 ஆம் தேதிமுதல் பெறப்பட்டு வந்தது. தற்போது காலக்கெடு ஜீன் 20 ஆம்
தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்.

மேலகரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், முருகன் மற்றும் மாரியப்பன் ஆகிய மூவருக்கும் மாடசாமி கோவில் தொடர்பாக பகை இருந்துள்ளது.இந்நிலையில் 25ம் தேதி செல்வராஜ் மேலகரத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேரும் செல்வராஜை தாக்கினர். அதை தடுத்த அவரது மனைவியையும் மிரட்டியுள்ளனர் இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரில் குற்றாலம் போலீசார் 3 பேர் கைது
Sorry, no posts matched your criteria.