Tamilnadu

News April 5, 2024

திருச்சி விமான நிலையத்தில் பால்குடம்

image

திருச்சி விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 41ம் ஆண்டு திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகர்ப்புறங்களில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

News April 5, 2024

மயிலாடுதுறை: தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறை

image

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 5, 2024

நாமக்கல்: போஸ்டர் வெளியிட்ட சிட்டி யூனியன் வங்கி

image

மக்களவை 2024 தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதனிடையே நாமக்கல் பகுதியில் அமைந்துள்ள வங்கிகள் அமைப்புகள் சார்பில் தேர்தல் போஸ்டர்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் நகரில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

News April 5, 2024

எடப்பாடி பழனிசாமி மீண்டும் மதுரையில் பிரச்சாரம்

image

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28 அன்று மதுரையில் பிரச்சாரம் செய்தார். தற்போது, தேனியில் பிரசாரம் செய்ய ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு மதுரை வரும் எடப்பாடி, 9 ஆம் தேதி காலை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஓட்டு சேகரிக்கிறார்.

News April 5, 2024

கடலூர்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (ஏப்ரல்.5) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மருத்துவர் கவிதா தலைமை தாங்கினார். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

மயிலாடுதுறையில் தீவிர வாக்கு சேகரிப்பு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பாபு போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நகர அதிமுக நிர்வாகிகள் பல்வேறு தெருக்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர். மேலும் பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி கை சின்னத்தில் வாக்கினை செலுத்துமாறு அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

News April 5, 2024

கடலூர்: 2-வது கட்ட நீச்சல் வகுப்பு 16ஆம் தேதி துவக்கம்

image

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்ட நீச்சல் வகுப்பு வரும் 16ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 5, 2024

தி மலையில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு போட்டி

image

திருவண்ணாமலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவிலான கையுந்து போட்டி நாளை நாளை(ஏப்.06) காந்திநகர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாண்டியன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார். இதில் முதல் 4-இடம் பிடிக்கும் அணியினருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

News April 5, 2024

நாமக்கல்: நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

image

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்ஜித் கவுர் அவர்கள் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் தற்போது வேலூர் மாவட்டத்தை விட திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!