India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கமுதி செங்கப்படையை சேர்ந்தவர் முனியசாமி (35). இவரும், இவரது உறவினர் பாண்டி (36) என்பவரும் பைக்கில் நேற்று சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலார் மின் உற்பத்தி மையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பாண்டி படுகாயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(60). இவர் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு சாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாமிநாதன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தற்காலிகமாக கல்வி பயின்று வருகின்றனர். தங்களுக்கு கல்வி பயில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்று கூறி எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக் குழு விரைவில் ராமநாதபுரம் வந்து அடிப்படை கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது.

மக்களவை 24 நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா நேற்று திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் உட்பட தேர்தல் அதிகாரிகள் பலர் உள்ளனர்.

அரக்கோணம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் சோதனைகள் மூலம் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.1,37,18,560 பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அலுவலர்கள் காவல்துறையினர் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இன்றும் நாளையும் தங்களது தபால் வாக்குகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் நேரடியாக வந்து செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

திருச்சி லோக்சபா அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி ஓலையூர் முள்ளிப்பட்டி பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராமம் கிராமமாக சென்ற கருப்பையாவுக்கு பெண்கள் வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உங்களிடம் எத்தனை வேட்பாளர்கள் வேண்டுமானாலும் வரலாம் அவர்களை , நீங்கள் இதற்குப் பிறகு பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களில் ஒருவன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மென் பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி மே.8 முதல் மே.22 வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை பணியாளர்களை, கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணியினை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் (காவல்) தசத்ய வீர கட்டாரா , கரூர் பாராளுமன்ற தொகுதி திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்
அமித் குமார் விஸ்வகர்மா
ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு நேற்று வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் கலந்துகொண்ட இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.