Tamilnadu

News April 10, 2024

நெல்லையில் இருந்து சிறப்பு பேருந்து

image

திருவண்ணாமலையில் ஏப்ரல் 23ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 10, 2024

தேனி: முதல்வர் தீவிர ஆலோசனை

image

தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தேனி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

News April 10, 2024

நாமக்கல்: வானதி சீனிவாசன் நாளை வருகை

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான ,வானதி சீனிவாசன் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, நாளை திருச்செங்கோடு, குருசாமிபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 10, 2024

சிவகங்கை: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

image

சிவகங்கையில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் விதமாக வனத்துறையினா் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதிகளில் மான், முயல், மயில்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட வன அலுவலா் பிரபா உத்தரவின்பேரில், 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 10, 2024

புதுவை ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு..

image

ரமலான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 10, 2024

ஈரோடு: 2 இடங்களில் அதிரடி நடவடிக்கை

image

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் சோதனை சாவடி பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80,000, பாரியூர் தொட்டிபாளையம் பிரிவு அருகில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.57,000 பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

News April 10, 2024

செங்கல்பட்டு: 4 வீடுகளில் கொள்ளை முயற்சி

image

செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தை சுற்றியுள்ள ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி(39), பரசுராமன் (42) ஆகியோரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்டு தப்பியோடினர். அதேபோன்று சிங்கப்பெருமாள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2024

மதுரை: விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

image

விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை அருகே இன்று முன்னால் சென்ற பைக் மீது கார் மோதி சாலை ஓரத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஓட்டுநர் மணியின் மகள் சிவஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

News April 10, 2024

கோவையில்: டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் ஏப்ரல்.17ஆம் காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் ஜூன்.04 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

தேனி அருகே விபத்து

image

ஆண்டிபட்டி  அருகே உள்ள எஸ்எஸ் புரம் பகுதியில் கேரளாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த தம்பதி மற்றும்  குழந்தை படுகாயமின்றி உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.  

error: Content is protected !!