India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர்.

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி புதுகை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) காலை 7 மணி முதல் 10 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தென்காசி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் வார இறுதி நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். அந்த வகையில் நேற்று 20 டன் காய்கறிகள் மற்றும் 4.75 டன் பழங்கள் என மொத்தம் 24.75 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,230 பேர் வாங்கி சென்றனர்.

திருப்பூர்; எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் ஆறு சாய ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை, செய்து வரும் நிறுவனம் சுத்திகரிப்புக்கான தொகையை வழங்காமல், நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனம், விளக்கம் அளிக்க அதிகாரிகள் நோட்டீஸ் நேற்று அளித்தனர்.

சக்கம்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஆண்டிப்பட்டி பஜாரில் உள்ள நகைக்கடையில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் பணிக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (மே 13) அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை, தருமபுரம் பகுதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலின் ஏகதின உற்சவத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனை சிறப்பாக நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்து கஞ்சி மற்றும் தயிர் சாதம் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.