Tamilnadu

News May 18, 2024

தேர்வில் அசத்திய மனைவிக்கு பாராட்டு

image

ராணிப்பேட்டை மாவட்டம் பழனி, அம்சா அவர்களின் மகள் சுபஸ்ரீ. இவர் நடந்த முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வில் 500/491 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது இடத்திலும், வி.கே மாங்காடு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுக மாவட்ட கழக பொருளாளர் A.V. சாரதி அவர்களிடம் வாழ்த்து பெற்று அவரின் உயர் கல்விக்கான உதவித்தொகையை வழங்கினார்.

News May 18, 2024

கல்லூரி மாணவர் தற்கொலை

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 18, 2024

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு

image

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டிதெரு சந்திப்பு வரை மெட்ரோ பணி நடைபெறவுள்ளது. இதனால் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள், வடமலை தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடமலை தெரு, அருணாசலம்தெரு, வெங்கடேச பக்தன்தெரு வழியே செல்லலாம். இது ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

News May 18, 2024

தென்காசி: வனத்துறை கண்ட்ரோலில் 2 அருவிகள்

image

தென்காசியில் நேற்று பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் மேலும் 2 அருவிகளான பழைய அருவி மற்றும் பிரதான அருவி இருப்பதால் தென்காசி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் இன்று முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News May 18, 2024

பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர் முதுநிலை, முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-2025ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

News May 18, 2024

நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்..ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

நெல்லை மாவட்டத்துக்கு இன்றும்(மே 18), நாளையும்(மே 19) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் கண்காணிப்பில் உள்ளனர்.

News May 18, 2024

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு பரவலா?

image

தமிழகத்தில் மே மாதத்தில் 15 நாட்களில் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளாகியுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் டெங்கு மதிப்பில் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று அறிவுறுத்தி உள்ளனர்.

News May 18, 2024

கடலூர்: மகனைகொடூரமாக தாக்கிய தந்தை கைது

image

கடலூர் அடுத்த உச்சிமேடு சேர்ந்தவர் முத்துக்குமரன் (42) மகன் முகேஷ்(17). முத்துக்குமரன் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதை முகேஷ் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமரன் கத்தரிக்கோலால், முகேஷ் கழுத்தில் குத்தினார். காயமடைந்த முகேஷ் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் முத்துக்குமரனை கைது செய்தனர்.

News May 18, 2024

குமரி இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் குமரியில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News May 18, 2024

நெல்லை அணைகள் நிலவரம்!

image

நெல்லை மாவட்டத்தில் வானிலை சுழற்சியால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(மே 18) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியானது. இதுவரை பாபநாசத்தில் 50 அடியும், மணிமுத்தாறு 85 அடி, சேர்வலாறு 62 அடி, பச்சையாறு மற்றும் கொடுமுடி ஆறு அணைகளில் 12 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர் வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!