India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் ஏ பி முருகானந்தத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைவது உறுதி எனவும் திருப்பூரிலும் பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய சுப்பராயனுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கடந்த ஐந்து வருடத்தில் சுப்பராயன் மேற்கொண்ட பணிகள் 100 என்ற புத்தகத்தை பிரகாஷ்காரத் வெளியிட்டார்.

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவு கட்டடத்தில் இன்று திடிரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வாகனம் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிக்கி கொண்டது. தீயை அணைக்க முடியாத நிலையில், அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் காணப்பட்டது.

அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு அந்தியூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஆகிய நான்கு நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. இன்று நிலை நிறுத்தப்பட்டது. தேரில் பவனியில் மக்களுக்கு அருள் பாவித்த பிறகு இன்று தேர் நிலை சேர்ந்து பின்னர் ஆலயம் வந்து அம்பாள் ஒய்வு எடுக்கும் காட்சி வெளியானது.

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள், போலீசார் இருந்தனர்.

அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் இன்று நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மகா சண்டியாகத்தில் பக்தர்கள் புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது.

பழவேற்காடு அடுத்த ஜமீலாபாத் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சு. பிரேமலதா தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக மீஞ்சூர் வட்டாரக்கல்வி அலுவலர் கே. முனிராஜசேகர் கலந்துக்கொண்டனர்.

கொடைக்கானலில் துணை ராணுவப் படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து ஒத்திகை மற்றும் கொடி அணிவகுப்பு இன்று நடத்தினர். நாயுடுபுரம் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு ஏரிச்சாலை , கலையரங்கம் பகுதி , பேருந்து நிலையம் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மூஞ்சிக்கல் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 100% வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் ஜமாத்தார்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்சியர் தர்ப்பகராஜ் முதற்கட்டமாக 1000 வாக்காளர்களின் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் பணியினை மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.