Tamilnadu

News April 9, 2024

ஈரோடு: அடிமை இனம் உருவாகிக் கொண்டிருக்கிறது

image

ஈரோடு மக்களவை தொகுதியில் நாதக சார்பில் கார்மேகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, “தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது” என்றார்

News April 9, 2024

மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்.15ல் தொடக்கம்

image

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் நடைபெறும் தேர்தல்

image

போடிநாயக்கனூர் பகுதிக்கு வருகை தந்த திமுக பேச்சாளர் திருச்சி சிவா திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வருகின்ற 19ஆம் தேதி ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் நடைபெறும் தேர்தல் இது; இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய உங்கள் வாக்கை திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 9, 2024

புதுக்கோட்டையில் மஞ்சள் நீராட்டு விழா

image

புதுக்கோட்டை நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கீழ நான்காம் விதி வடபுறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா கடந்த நேற்று நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு இன்று அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபட்டு சென்றனர்.

News April 9, 2024

நாமக்கல்: ஆர்.எம்.விக்கு மலர் அஞ்சலி

image

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் மறைவையொட்டி நாமக்கல்லில் எம்ஜிஆர் கழகத்தின் மாஜி மாவட்ட செயலாளர் வெள்ளையன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் எம்ஜிஆர் கழக நிர்வாகி பழனி பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சின்னசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

News April 9, 2024

தோவாளை: ரங்கோலியிட்டு தேர்தல் விழிப்புணர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே மலர்களால் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

image

இன்று தர்மபுரி மாவட்டம் கூத்தமடை காலனி பகுதியைச் சார்ந்த ராசாத்தி (23) அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் தர்மபுரி 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது ராசாத்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சசிகலா ராசாத்திக்கு பிரசவம் பார்த்தார். அதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அவசரகால ஓட்டுநர் இளையராஜா பத்திரமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News April 9, 2024

திண்டுக்கல்: பிரச்சார மேடையால் பாதிப்பு

image

திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் எடப்பாடி பழனிச்சாமி இன்று எஸ்டிபி கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் போடப்பட்ட மேடையால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

News April 9, 2024

திருச்சியில் மின் பயன்பாடு 30 சதவீதம் அதிகரிப்பு

image

திருச்சி மாநகரில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் புழுக்கமான வானிலைக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் குளிரூட்டிகள் மற்றும் பிற மின்சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மின்சார நுகர்வு 30% அதிகரித்துள்ளது.
இது குறித்து மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தேர்தல்-தேர்வுகள் முடிந்ததும் பராமரிப்பு பணி மீண்டும் துவக்கப்படும் என்றார்.

News April 9, 2024

தென்காசி: தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

image

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல் வலியுறுத்தி தென்காசியில் உள்ள அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கி ஸ்டிக்கர் ஒட்டும் பணி இன்று நடைபெற்றது. கீழப்பாவூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் சிவக்குமார் மாரீஸ்வரன் பங்கேற்றனர்.

error: Content is protected !!