Tamilnadu

News April 10, 2024

நாமக்கல் வானிலை நிலவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 107.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரி ஆகவும், காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

சேலம்: திமுக பொது கூட்டத்திற்கு வந்த இருவர் பலி

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கெங்கவல்லி பேரூராட்சிக்கு வருகை தந்தார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக சேலம், காமக்கபாளையத்தைச் சேர்ந்த தயாநிதி, செல்லதுரை என்பவர்கள் ஆட்டோவில் வந்தனர். அப்போது நாவலூர் ஏரிக்கரை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இருவர் பலியாகினர். இதுகுறித்து வீரகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 10, 2024

தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை

image

மக்களவைத் தோ்தல் விதிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில், 24 மணி நேரமும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தொலைபேசி மூலமாக 19 புகாா்களும், சி-விஜில் செயலி மூலமாக 7 புகாா்களும் பெறப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உடனுக்குடன் தீா்வு காணப்பட்டுள்ளது.

News April 10, 2024

பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை

image

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
சோதனையின் போது கார், வேன், டெம்போ என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, பணம், பொருட்கள் எடுத்துச் செல்கின்றனரா என தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதித்தனர்.

News April 10, 2024

வாக்கு என்னும் மையத்தில் ஆய்வு

image

கரூர், மண்மங்கலம் அடுத்து தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியல் கல்லூரியில் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 10, 2024

ஃபேஷன் ஷோ கூட நடத்தட்டும் ஓட்டு விழாது: கார்த்தி சிதம்பரம்

image

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரத்திடம் ரோடு ஷோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், ‘மோடி ரோடு ஷோ என்ன,  பேஷன் ஷோ கூட நடத்தட்டும். அதையும் வேடிக்கை பார்க்கிறவர்கள் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டுப்போடுவது என்பது திமுகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான்’ என கிண்டலாக பதிலளித்தார்.

News April 10, 2024

புதுவையில் தங்க நகைகள் பறிமுதல்

image

புதுவை கோரிமேடு எல்லைப் பகுதியில் நேற்று மாலை தன்வந்திரி காவல் நிலைய போலீஸாா் உதவியுடன் தோ்தல் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சென்னையில் பிரபல நகை தயாரிப்பு மினி வேன் வந்தது. அதைச் சோதனையிட்டபோது சரியான ஆவணங்கள் இல்லாததால் 50.56 லட்சம் மதிப்புள்ள 1.141 கிலோ தங்கநகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

News April 10, 2024

சென்ட்ரலில் ரூ. 30 லட்சம் பறிமுதல்

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த ஹைதராபாத் விரைவு ரயில் பயணிகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, பையில் ரூ.30 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. நகை வாங்குவதற்கு கொண்டு வந்ததாக கூறிய அவர், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News April 10, 2024

நாளை ரம்ஜான்: பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரம்ஜான் பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு இறைச்சி மஸ்தான் நகர் பகுதியில் உள்ளீர் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற உள்ளது. இதற்காக பல் இந்த பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

News April 10, 2024

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் முன் பதிவு

image

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500-க்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு முன்பதிவு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இதனிடையே ஒரே நாளில் 2000 மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!