India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கரூர் தொகுதியில் மட்டும் 28.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம், காரைக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மதியம் 12 மணி நிலவரப்படி 24.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி கிராப்பட்டி தனியார் பள்ளியில் வாக்கு சாவடி எண் 212ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது வாக்கினை செலுத்தினர். அருகில் உள்ள 214, 215வது வாக்கு சாவடியில் இயந்திர பழுது காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள் என தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரம் படி சோழவந்தான் 27.98% உசிலம்பட்டி 26.61% ஆண்டிபட்டி 20.71% பெரியகுளம் 25.10% போடிநாயக்கனூர் 28.73% கம்பம் 25.85% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் வயது 84 என்பவர் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக இன்று மதியம் வீல்சேரில் வந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர், “தான் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் வாக்களித்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் காமாட்சி அம்மாள். இவர் இன்று தனது 101 வயதிலும் காலையிலேயே வாழ்மங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அப்போது அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் தங்க . வரதராஜன் காமாட்சி அம்மாளிடம் ஆசி பெற்றார்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 22.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மேலூர் தொகுதியில் 28.66%, மதுரை கிழக்கில் 22.56%, மதுரை மேற்குத் தொகுதியில் 19.79%, தெற்கு தொகுதியில் 20.08%, மேற்குத் தொகுதியில்21.87%, மதுரை மத்திய தொகுதியில் 20.96 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

திருவண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆரணி மக்களவைத் தொகுதியில் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் 12,855 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர்.
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம் பட்டியில் 102 வயது மூதாட்டி சின்னம்மாள், காலையிலேயே வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். முதியோர்கள் வாக்களிக்க அந்த மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
Sorry, no posts matched your criteria.