India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். தான் வளர்த்து வரும் ஆடுகளை இன்று மாலை தொழுவத்தில் நாகராஜ் அடைத்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்விபத்து காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. ஆடுகளை காப்பாற்ற சென்ற நாகராஜ் தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில், திருப்பத்தூரில் இன்று அதிகபட்சமாக 107.24 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக 78.44 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நெமிலி தாலுகா பனப்பாக்கம் அருந்ததியர் பாளையம் புதிய தெருவை சேர்ந்தவர் எழில். இவரது மனைவி டில்லி ராணி( 23). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று மாலை டில்லிராணி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நெமிலி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே 100% வாக்களிப்பது குறித்த உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஆடைகள் அணிந்து கைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்து அவர்களுடன் இணைந்து போட்டியில் பங்கேற்றார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில அளவிலான சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில், திருவாரூர் தேர்தல் செலவின பார்வையாளர் வருண்சோனி, நாகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகை, திருவாரூர் எஸ்பிக்கள் உடன் இருந்தனர்,

மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று மாநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் சரவணனுக்கு கள்ளழகர் ஆதரவு அளிக்கும் வகையில் கள்ளழகர் வீதியுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேட்பாளர் வந்தபோது கள்ளழகர் கூட்டத்தில் திடீரென மக்கள் முன்னிலையில் எழுந்தருளிய நிகழ்வு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகமூட்டும் வகையில் அமைந்தது.

பழனி வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் பெரியசாமி தலைமையில் இன்று முதல்வரை சந்தித்தனர். ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும், பழனி கொடைக்கானல் ரோப் கார் திட்டம் செயல்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர். வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காரைக்கால் அடுத்த திருபட்டினம் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்ததால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல கட்ட ஆலோசனைக்கு பிறகு இன்று பழைய கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாநகர், சூரம்பட்டி பேருந்து நிறுத்தம், பாரதிபுரம், வ. ஊ.சி வீதி, அண்ணா வீதி,திரு. வி. க வீதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் தீவரமாக வாக்கு சேகரித்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.