Tamilnadu

News April 16, 2024

தி.மலையில் 102.2 டிகிரி பாரன்ஹீட்

image

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102. 2டிகிரி பாரன்ஹீட், 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 16, 2024

திருப்பத்தூர்: திமுகவில் இணைந்த பாமகவினர்

image

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுரில் மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி தலைமையில் வாக்கு சேகரித்தார். அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் பாஜகவுடன், பாமக கூட்டணி வைத்ததால் விரக்தி அடைந்த இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் சின்ன மூக்கனூர் வார்டு உறுப்பினர் சிரஞ்சீவி தலைமையில் ஒன்று திரண்டு மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

News April 16, 2024

பொதுமக்களுக்கு சிறப்பு கட்டண பாஸ் விநியோகம்

image

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு வினியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணத்தை காண 200, 500 ரூபாய் என இரண்டு சிறப்பு கட்டண சீட்டு அனுமதிக்கப்பட உள்ளது. சிறப்பு கட்டண சீட்டுகள் பெற மதுரை மேலச்சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 16, 2024

திண்டுக்கல்: 18.77 லட்சம் வாக்காளர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18,77,414 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு வாக்குப்பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

தேர்தல் பணிமனையில் ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி மாநகரத்திற்கு உட்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனையில் இன்று(16/04/2024) கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் அவர்கள். உடன் சண்பிரகாஷ், அதிசேகன், ராஜேந்திரன், நாராயண பிரசாத் உட்பட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

News April 16, 2024

வருமான வரித்துறையினர் சோதனை: கல்குவாரி சங்க தலைவர் பேட்டி

image

திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவர் ரிச்சர்ட் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்.16) சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து கல்குவாரி சங்க தலைவர் ரிச்சர்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் எனது வீட்டில் பணம் மற்றும் சான்றிதழ்கள் எதுவும் கைப்பற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

வாக்களித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பணியில் ஈடுபடக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.

News April 16, 2024

ராணிப்பேட்டை: புகார் அளிக்கலாம்

image

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு முரணாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை எந்த அரசியல் கட்சியினரோ வேட்பாளரோ விநியோகிப்பது கண்டறியப்பட்டால், இது குறித்த தகவலினை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04172-273190 / 273191 / 273192 / 273193 / 1950 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வைத்து விழிப்புணர்வு

image

வரும் நாடாளுமன்ற (2024) தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் வட்டம் மற்றும் நகரம் மகாமக குளக்கரையில் 100% வாக்களிப்பதை உறுதி செய்வது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் இன்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News April 16, 2024

குலசேகரம் பகுதியில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்பிக்கு கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் குலசேகரம், அண்டூர், மலவிளை பகுதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!