Tamilnadu

News April 19, 2024

மாலை நேரத்தில் குவிந்த வாக்காளர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர், கிளியனூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மதிய நேரத்தில் வெயில் தாக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் 4 மணிக்கு மேல் வாக்காளர்கள் குவிந்ததால் வாக்குச்சாவடிகள் நிரம்பியது. குறைவான நேரம் என்பதால் வாக்குச்சாவடி ஊழியர்களும் முகவர்களும் திணறினர்.

News April 19, 2024

ராமநாதபுரம்: 63.35 சதவீத வாக்குகள் பதிவு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 63.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 60% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 19, 2024

கடலூர் மாவட்டத்தில் 22 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…..

image

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைப் தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2024

விழுப்புரம்: ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்

image

விழுப்புரம் தொகுதி நடுக்குப்பம் கிராம மக்கள் காலையில் தேர்தலை புறக்கணித்த நிலையில் தற்போது வாக்களிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரவுபதி அம்மன் கோயில் பிரச்னையால் தேர்தலை புறக்கணித்த மக்கள் வாக்களிக்க திரண்டனர். மேலும், ஒரே நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

News April 19, 2024

காஞ்சியில் 5 மணி நிலவரப்படி 65.33% வாக்கு பதிவு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவானது 5 மணி நிலவரப்படி 65.33% வாக்கு பதிவு ஆகி உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 6மணி வரையில்தான் வாக்குப்பதிவானது நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News April 19, 2024

திமுக எம்.எல்.ஏ.க்கள் விதி மீறல்கள்; அதிமுக செயலாளர் குற்றச்சாட்டு

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ஆளுங்கட்சியை சார்ந்த மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் மீறப்படுகிறது. இது சம்பந்தமான அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக கூறினார்.

News April 19, 2024

100 வயது முதியவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

image

திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வல்லூர் கிராமத்தில் வசிக்கும் 100 வயது முதியவரான ஸ்டீபன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவினை புத் எண் 220க்கு சென்று ஜனநாயக கடமையான தனது வாக்கை பதிவிட்டார். காமராஜர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

News April 19, 2024

வேலூர் தொகுதி 3 மணி நிலவரம்

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஒரு மணிக்கு பிறகு 3 மணி வரை பொதுமக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக, அதிகமாக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 53.98% வாக்கு பதிவும், குறைவாக குடியாத்தம் பகுதியில் 49.02 % மூன்று மணி நிலவரம் படி வாக்கு பதிவாகியுள்ளது. மொத்தம் வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19% வாக்குப் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

3 மணி நேர நிலவரப்படி 57.43% வாக்குப்பதிவு

image

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்றத் வாக்குப்பதிவு 3 மணி நிலவரப்படி காரைக்கால் வடக்கு தொகுதி 55.75 %, காரைக்கால் தெற்கு தொகுதி 54.39 %, திருநள்ளாறு தொகுதி 57.60 %, நிரவி திருப்பட்டினம் தொகுதி 57.06 %, நெடுங்காடு தொகுதி 62.38 % வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆக மொத்தம் காரைக்கால் மாவட்டத்தில் 3 மணி நேர நிலவரப்படி 57.43 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

ஸ்ரீவி: குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவர் குமஸ்தா வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தெய்வனையை தவறாக பேசிய புகாரில், வினோத்தை ஸ்ரீவி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாரிமுத்து புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். கடந்த 2ம் தேதி இரவு மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு வினோத்தை கைது செய்தனர்.

error: Content is protected !!