India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நேற்று(ஏப்.30) நடந்தது. இதை முன்னிட்டு சாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் ராஜபாளையம் தெருவில் உள்ள நவநீதகிருஷ்ணன் மடம் சார்பில் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக ஏராளமான தெரு நாய்கள் சாலையோரங்களில் கூட்டமாக வலம் வருகின்றன. இவற்றில் சில சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. இந்நிலையில் நேற்று(மே 1) ஒரே நாளில் 3 இடங்களில் 10க்கும் பேரை நாய்கள் கடித்து குதறியது. இதில் ராஜஸ்தானில் இருந்து சுற்றுலா வந்த 3 பேரும் அடக்கம். எனவே இதனை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலத்தில், மாவட்ட ஆட்சியா் ச. உமா நேற்று ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநின்ற, பள்ளி செல்லாத மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 95140-00777 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் நேரிலும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று(ஏப்.30) தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று கலெக்டர் பிருந்தாதேவி விசாரணை நடத்தினார். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று (மே.1) துவங்குகிறது. இதில், வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்பட 1500 வகை வண்ண பூக்கள் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. இன்று துவங்கும் இந்த கண்காட்சி மே.12 வரை நடைபெற உள்ளது. மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சீர்காழி பகுதியில் சமூகநல செவிலியராக பணியாற்றிய தையல்நாயகி என்பவரின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று சீர்காழியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது பணியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று(மே 1) முதல் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரும்பாக்கம் மற்றும் பரங்கி மலை மெட்ரோ நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

செந்துறை வட்டம் நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றதுடன் தொடங்கியது. 5ஆம் நாளை முன்னிட்டு நேற்று (30.04.2024) படைத் தேரில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அம்மன் அருளை பெற்றுச் சென்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.