Tamilnadu

News May 8, 2024

தருமபுரியில் COOL கிளைமேட்!

image

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க நிலையில் நேற்று(மே 7) மாலை வெயில் தாக்கம் மிக குறைந்த அளவே காணப்பட்டது. இந்நிலையில் இன்று(8.5.2024) அதிகாலை 4 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் மேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியில் பொதுமக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

News May 8, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 8, 2024

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

image

மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கட்டணத்துடன் கூடிய தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 13 முதல் 24 வரை நடக்கும் பயிற்சியில் சுத்த தங்கம் கணக்கிடும் முறை, உலோகவியல், கடன் தொகை வழங்கும் முறை, தங்கம் தரம் பார்த்தல் செய்முறை விளக்கம் அளிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் 86956 46417 எண்ணில் முன்பதிவு செய்யலாம்

News May 8, 2024

தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு: தந்தை பலி

image

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குழியை சேர்ந்த தந்தை, மகனை மர்ம நபர்கள் இன்று (மே 8) அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தந்தை டேவிட் (56) சம்பவ இடத்திலேயே பலியானார்‌. மகன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 8, 2024

காங். நிர்வாகி மர்ம சாவில் மேலும் 2 தனி படைகள்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பயன்படுத்தியுள்ள இரண்டு செல்போன்களையும் காணவில்லை. இதனால் விசாரணைக்கு உதவியாக மேலும் இரண்டு தனிப்படைகள் நேற்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மொத்தம் பத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 8, 2024

நெல்லையப்பர்: 40 நாள் திருவிழா தொடங்கியது

image

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்வாக இன்று (மே 8) காலை பந்தக்கால் நட்டு விமரிசையாக துவங்கியது. 40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தக்கால் நடும் விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனர். நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

News May 8, 2024

கிரிக்கெட் மைதானமாக மாறிய கல்லணை கால்வாய்

image

தஞ்சை விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வந்த கல்லணை கால்வாய், சுட்டெரிக்கும் வெயிலால் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனை பார்த்த இளைஞர்கள் கல்லணை கால்வாய்க்குள் இறங்கி உற்சாகமாக கிரிக்கெட் விளையாட தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு ஏற்றார்போல் கல்லணை கால்வாய்க்குள் ஆங்காங்கே சிமெண்டு தளம் போடப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

News May 8, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலை மற்றும் தரை நிலை நீர் தேக்க தொட்டிகளை டேங்க் ஆபரேட்டர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், குடிநீர் தொட்டிகள் சுத்தமாக இருப்பதை ஊராட்சி செயலாளர்கள், செயல் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

கல்லூரி கனவு’ குறித்த ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று(மே 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிளஸ்-2 முடித்த மாணவ மாணவியர், உயர்கல்வியை எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்பது குறித்து விளக்கும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

News May 8, 2024

பெரம்பலூர் அருகே மீன்பிடித் திருவிழா

image

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராம ஏரியில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9 ஆண்டுகளாக செஞ்சேரி ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறாத நிலையில் தற்போது ஏரியில் தண்ணீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த குரும்பலூர், பாளையம், ஆலம்பாடி, மேலப்புலியூர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

error: Content is protected !!