Tamilnadu

News May 20, 2024

ஆம்பூர்: தேனி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

image

ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.  நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தார் மாமலை காட்டில் தேனீ எடுக்க சென்றார். அப்போது தேனி கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை நண்பர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

News May 20, 2024

மதுரையில் அஞ்சல்தலை கண்காட்சி!

image

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் இன்று அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது. தபால் தலை நிபுணர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால முதல் தற்போது வரை உள்ள ஆயிரக்கணக்கான வகையிலான அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

News May 20, 2024

ஜமாத் தலைவருக்கு எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்

image

நெல்லை மாநகர டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீத் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று (மே 20) இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவரை இழந்து வாடும் ஜமாத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

News May 20, 2024

கொடைக்கானல்: காா் கவிழ்ந்து இளைஞா் பலி

image

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலை நண்டாங்கரைப் பகுதியில் சென்ற போது காா் கட்டுப்பாட்டை இழந்து 200-அடிப்பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் சென்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவசர ஊா்தியில் 4 பேரையும் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பைஜூா் ரகுமானை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

News May 20, 2024

புதுவையில் தொடரும் இணையவழி மோசடி

image

புதுச்சேரி திலாசுப் பேட்டை ஹிமான்ஷு மீனாவிடம் ரூ‌.1.22 லட்சம், புதுச்சேரி மங்கலம் விஜயஸ்ரீயிடம் ரூ.5,000 ரெட்டியாா்பாளையம் ராம்குமாரிடம் ரூ 13,200, புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் சிலம்பரசனிடம் ரூ 6,670, இலாசுப்பேட்டை வெற்றி வேலிடம் ரூ 3,750 பெற்று நூதனமுறையில் ஏமாற்றி ரூ.1.51 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து இணையவழிக் குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News May 20, 2024

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

நெல்லை மாவட்டம் பிரதான அணைகளின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடி,156 உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.86 அடி,118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.40 அடி காணப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது.

News May 20, 2024

திருப்பூரில் 364.50 மிமி மழை பதிவு

image

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரின் ஏராளமான பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்கு பகுதியில் 60 மில்லிமீட்டர் மழையும், தெற்கு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 38 மில்லி மீட்டர் மழையும், காங்கேயத்தில் 23 மில்லிமீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 20, 2024

தொழிற்பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு

image

திருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் இயங்கிவரும் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் பயிற்சிபெறும் மாணவ, மாணவிகள் அரசின் வழிகாட்டுதல்படி சலுகைகள், ஊக்கத்தொகை, உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் https://www.skilltraining.gov.in என்ற இணையத்திலும், 0421-2429201 என்ற எண்ணிலும் விவரம் பெறலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

News May 20, 2024

குளம்போல் மாறிய ஆட்சியர் அலுவலகம்!

image

மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரம் பலத்த கனமழை பெய்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

News May 20, 2024

நெல்லையில் அரசு பேருந்துகள் ஓடுமா?

image

நெல்லையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 24ல் தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் நடக்க உள்ள நிலையில் அன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் ஓடுமா? என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

error: Content is protected !!