India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மன்மங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாங்கல் போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ரவிக்குமார், குமார், உதயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்.29 முதல் மே.3 வரை 5 நாள் சுற்றுப் பாயணமாக கொடைக்கானலில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சற்றுமுன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு புறப்படார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய மருத்துவர் செவிலியர் இல்லாத காரணத்தால் நேற்று நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் போட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பணியில் இருந்த தலைமை செவிலியர் மற்றும் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நகர்வலம் சென்ற தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மேல் கள்ளர் வேடம் தரித்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. அன்று இரவு நகர்வலம் வந்தார். நேற்று காலை 9 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். மதியம் திருமஞ்சன அலங்காரம் நடந்தது. பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் இரவு தனது இருப்பிடமான தாடிக்கொம்பு கோயில் சன்னதிக்கு வந்தடைந்தார்.

தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் அடிவாரத்திலிருந்து மலையேற துவங்கியுள்ளனர். அப்போது, அவர்களில் புண்ணியகோடி என்பவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை மீட்ட நண்பர்கள் பூலுவபட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் தனது உறவினரின் குழந்தையான 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில்,சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்தவாசி மகளிர் போலீசார் தேவேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே இன்று(ஏப்ரல்.29) சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் இருவரும் மாமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நெல்லை தாழையூத்தை சேர்ந்தவர் சந்தன மாரிமுத்து .நேற்று முன்தினம் இவர் கயத்தார் அருகே சூரிய மினிக்கண் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். நேற்று அதிகாலை நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இவரை ஹரி பிரசாத் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தன மாரிமுத்து உயிரிழந்தார். கயத்தாறு போலீசார் ஹரி பிரசாத் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 9,600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கெங்குவார்பட்டி அருகே வத்தலகுண்டு மெயின் ரோட்டில் அழகரம்மாள் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவரது மூத்த மகன் விஜய் என்பவர் ஹோட்டலுக்கு வந்து சொத்தை பிரித்து தரக்கோரி தகராறு செய்து அங்கிருந்த அரிவாள் மனையை எடுத்து அழகரம்மாவின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் விஜயை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.