India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புழல் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் மாற்றியினை இயக்கத்திற்கு கொண்டு வர தேவையான பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(மே 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல் முழுவதும், சூரப்பட்டு முழுவதும், விநாயகபுரத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். மதியம் 2 மணிக்கு மேல் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

விருத்தாசலம் வர்த்தகர்கள் நல சங்க தலைவர் கோபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வணிகர் தினம் மதுரையில் வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கிறது. எனவே இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அனைத்து வர்த்தகர்களும் தங்களது குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி வெயில் 4ம் தேதி தொடங்குகிறது. அதிலிருந்து பாதுகாத்து கொள்ள நாமக்கல் நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.இதனை ஒட்டி நாமக்கல் கடை வீதியில் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பாக தென்னை ஓலையில் வேயப்பட்ட படலங்கள் மற்றும் நிழல் விலைகளையும் அமைத்து வருகின்றனர்.இதனால் தங்கள் கடைக்கு வரும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதால் பொது மக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து, துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் இன்று ராஜாங்கபுரம் கிளை அதிமுக பொதுமக்களுக்கு நீர் மற்றும் நீர்சத்து பழங்கள் வழங்கப்பட்டன.அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் ராசு ஒன்றிய செயலாளர் கணேசன், லட்சுமி பாண்டியன், நடராஜன், மைதீன், நாலாயிரம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பிவி வரதராஜன் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் மீது தனக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனால் பாஜ கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில், காவேரியின் வடகரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் புராண பெயர்களாக கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றழைக்கப்பட்டன. இக்கோயில் புராண கதை வரலாற்றைக் கொண்டது. 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோயிலாக இந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் கருதப்படுகிறது. மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருவது சிறப்பானது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 528 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது 300க்கும் மேற்பட்ட ஏரிகளில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதனால் வரும் சொர்ணவாரி பருவ விவசாயத்திற்கும், இந்தாண்டு குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மோப்ப நாய் படை பிரிவினர்கள் கொண்டு வெடிப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறியும் ஒத்திகை நிகழ்ச்சி காவலர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. அதனை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மோப்ப நாய் பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கவாத்து பயிற்சியின் போது அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் அப்போது, ஆயுதப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்

புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிந்து செல்கின்றனர். அந்த வகையில் கால்நடைகளும் அடிக்கிற வெயிலுக்கு இரை தேடாமல் நிழலை தேடி பசு மாடுகள் அலைகின்றன.
Sorry, no posts matched your criteria.