Tamilnadu

News April 15, 2024

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

News April 15, 2024

நெல்லையில் போலீஸ் குவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு இன்று (ஏப். 15) பிரதமர் வருவதை ஒட்டி பாதுகாப்பிற்காக நெல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி அம்பாசமுத்திரம் வருவதை ஒட்டி நெல்லையில் 2500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 15, 2024

‘அலோபதி மருத்துவத்தை அழிக்க திட்டம்’

image

சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளரிடம் நேற்று பேசுகையில், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றை இணைத்து மிக்சோபதி எனும் மருத்துவ முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அலோபதி எனும் நவீன அறிவியல் சிகிச்சை முறையை ஒழித்துக் கட்டும் செயலாகும். மூடநம்பிக்கையும், ஆன்மீகத்தையும், மருத்துவத்துறையில் நுழைக்க கூடாது என்று வன்மையாக கண்டித்தார்.

News April 15, 2024

உதயநிதி ஹெலிகாப்டரை பறக்கும் படை சோதனை

image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ஏப். 14) ஊட்டி வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் தரையிறங்கிய, அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காலை (ஏப்.15) ஆ.ராசாவுக்காக ஓட்டு கேட்டு, காபி ஹவுஸ் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

News April 15, 2024

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

image

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 216 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் 408 மில்லியன் கன அடி நீரிருப்பு உள்ளது.

News April 15, 2024

சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில் கொள்ளை

image

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் அன்பழகன் என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 15, 2024

சட்டென்று மாறுது வானிலை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அதிகபட்சமாக 2 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

News April 15, 2024

மீண்டும் சென்னையில் வெப்ப அலை

image

தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலைகள் தாக்க உள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 42° செல்சியஸும், சென்னையில் 40° செல்சியஸும் பதிவாக வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த தாக்கம் வியாழக்கிழமை (ஏப்.18) முதல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

சித்திரை திருவிழாவில் நகை பறித்த நால்வர் கைது

image

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் நேற்று ஆவணி மூலவீதி, அம்மன் சன்னதி சந்திப்பில் சுவாமி ஊர்வலத்தின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய 4 பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுகுணா, உமா, செல்வி, ராஜாமணி என்பதும் இவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பவுன் நகையை திருடி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News April 15, 2024

மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

image

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.

error: Content is protected !!