India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் அரசு கட்டிட கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் இருந்த காய்ந்த புற்களால் நேற்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள், செடி, கொடிகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.

தஞ்சை, கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவாழம்பொழில் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த குத்தாலம் பகுதியை சேர்ந்த ஜெகன் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் ரூ.63,000 பணம் இருந்தது தெரியவர, உரிய ஆவணமில்லாத அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை. இவர் அதிமுக பிரமுகரான இவர் நேற்று மாலை கட்சிக்காரர்களுடன் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது மாங்காயை மரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இரவு இறந்துவிட்டார்.

குமரி மக்களவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோட்டார், பறக்கை ஜங்ஷனில் தொடங்கி இளங்கடை, வெள்ளடிச்சி விளையில் பேரணி நிறைவடைந்தது.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி மோகனா நேற்று 26 ம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்
இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் மேலும் கூடுதலாக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் இன்று மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுடன் மலை இரயில் பயணத்திற்கும் உலகப் புகழ்பெற்றது. இந்நிலையில் தினமும் குன்னூர் உதகை, மேட்டுப்பாளையம் உதகை என மலை ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் வரும் கோடை சீசனை முன்னிட்டு உதகை கேத்தி, கேத்தி உதகை இடையேயான மார்க்கத்தில் சிறப்பு மலை இரயில் சேவையை வரும் வெள்ளி முதல் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்கள் இயக்க தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை, அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து சர்மிளாஜியை நீக்கம் செய்த அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவி முறைகேடு செய்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி பதவி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மீண்டும் அவருக்கு பதிவு வழங்க உத்தரவிட்டுள்ளது.

தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளா் விஜயன், தனது சொத்து விவரங்களை வேட்பு மனு தாக்கலின்போது சமர்ப்பித்தார். அதன்படி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1.54 லட்சமும், அசையும் சொத்தாக ரூ.3.61 கோடியும், அசையா சொத்தாக ரூ.2.21 கோடியும் உள்ளது; மேலும் ரூ.4.82 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்; அவரது மனைவி கவிதா பெயரில் அசையும் அசையா சொத்தாக ரூ.6.17 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.