India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.

கரூர் நகர போலீசார் கோதை நகரில் நேற்று(மே 26) ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி, மோத்தீஸ் என்பதும், இருவரும் முதியவரை தாக்கி பைக்கை பறித்தும், பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய முயன்றபோது தப்பித்து செல்ல பாலத்திலிருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரிமங்கலம் அருகே காமலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்-காவியா தம்பதியினர். இவர்களது 2 வயது குழந்தை ஆதவன், நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்த நிலையில், மேல் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சேலம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள முட்டல் நீர்வீழ்ச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குவிந்தனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அருவியில் தண்ணீர் வரத்து பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் கூட்ட அரங்கில் (மே.26) நேற்று (2008-2011) ஆம் ஆண்டு குரும்பலூர் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் படித்த கல்லூரி மாணவ, மாணவிகள் 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு நட்பை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை இருந்து முன்னாள் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வீடுகள், கடைகளுக்குள் புகும் குரங்குகள் உணவு பொருட்களை சூறையாடி செல்வதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலையில் செல்லும் மக்களை கடிக்கவும் பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக் காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில், கட்டட வேலை பார்த்து வந்த சுபாஷ் குமார் பஸ்வான் என்ற பீஹார் தொழிலாளியை கொலை செய்து, அலைபேசியை பறித்துச் சென்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக சிக்காமல் தப்பி இருந்த குற்றவாளிகள் மூவர், 6 மாதங்களுக்கு பின் நேற்று(மே 26) போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது சிக்கினர். சங்கையா(20), சந்தோஷ்(20), வல்லரசு(22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தெங்கம்புதூர் பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (37) (டாஸ்மாக் ஊழியர்). நேற்று முன்தினம் இவரது வீட்டு முன் சந்தேகப்படும் வகையில் நின்றவர்களிடம், ஏன் இங்கு நிற்கிறீர்கள்? என சரவணன் கேட்டதும் மூவரும் அவரை தாக்கி அரிவாளால் வெட்டினர். காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரி கிருஷ்ணன், ஹரீஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் இன்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜங்கலபுரம் , கல்நார்சம்பட்டி, பச்சூர், அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை செய்த ராதா, சுமதி, கலைவாணி, மற்றும் சின்னமணி ஆகிய நான்கு பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 67 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்

நத்தம் அருகே சாலையில் குறுக்கே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இன்று சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்த தகவல் அறிந்த நத்தம் காவல் துறையினர் ஓட்டுநர் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Sorry, no posts matched your criteria.