India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றைக்குள் (30.4.24) செலுத்தினால், வரியில் 5% வரை தள்ளுபடி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தாவிட்டால், 1% வட்டியுடன் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலில் மாவட்டத்தில் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை 7 மணி வரை நெல்லை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து புதுக்கூரைப்பேட்டை அருகே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வகுமார்-சபிதா தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பெற்றோர் விபத்தில் பலியான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கோயில் திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்த நிலையில் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகின்றனர். இப்போட்டியில் 23 பேர் காயமடைந்தனர்.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மேரி கிறிசிபா. இவரது கணவர் பாஸ்கர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி உனக்கு விவகாரத்து வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி கணவரின் உறவினர்களான ஷீபா, பால்சன் ஆகிய இருவரும் ரூ.13 லட்சம் பெற்றதாக அப்பெண் நாகர்கோவிலில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

திருச்சி,அரியமங்கலம் அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.பட்டப்பகலில் துப்பாக்கி, கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் முத்துக்குமாரை வெட்டி கொன்று தப்பித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக லோகநாதன், இளஞ்செழியன் இருவரையும் அரியமங்கலம் போலீசார் இன்று கைது செய்தனர். 2021ல் நடந்த சிலம்பரசன் கொலைக்கு பழிக்கு பழியாக தற்போது முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்
இன்று (30.04.2024) காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.