India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை வந்தடைந்து. மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி புறப்பட்டு சென்றது. திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் கடைசி பெட்டியில் புகை வருவதை கண்டு உடனடியாக கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.விரைந்து தீயை அணைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்சி அருகே மணிகண்டன் யூனியன் அலுவலகம் அருகே வாட்டசியர் ஓட்டுநர் ஒட்டி சென்ற கார் தாறுமாறாக சென்று எதிர் திசையில் வந்த வாகனங்கள் மீதும், பைக் மீதும் மோதியதில் தனபால் உயிரிழந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோயில் பூசாரி மணி இன்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சுழி அருகே பூவாகனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பையா(81). முதியவர் சின்ன கருப்பையாவுக்கும் அவரது மகன் பாலகுருவுக்கும் இடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் சின்ன கருப்பையாவை பாலகுரு உள்ளிட்ட இருவர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நரிக்குடி போலீசார் நேற்று மே 25 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கல்லல் அருகே உள்ள செம்பனுார் சேவுகப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாடுகள் கலந்து கொண்டன. 153 வீரர்கள்
காளைகளை அடக்க களமிறங்கினர். இதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

சென்னை புறநகர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யு ரயில், தற்போது சிறப்பு ரயிலாக சென்னை திருச்சி இடையே வார இறுதி நாட்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று (மே 26) இரவு 11 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியே, நாளை (மே 27) காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில் கழிப்பறை வசதி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு வரும் 29 ஆம் தேதி தூத்துக்குடி ஜே எம் ஜே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 14 மற்றும் 16 வயது உடையவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் சரவணன்-மோனிகா தம்பதியரின் 2 வயது குழந்தை பெரிஸ் பிளாசா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில் குழந்தை தனியாக கோவை சாலையில் வந்ததை கண்ட போக்குவரத்து காவலர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையை தேடிக் கொண்டிருந்த அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே சாலையோரம் மான் ஒன்று காயங்களுடன் நேற்று (மே 25)செத்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செத்து கிடந்த மானை கைப்பற்றி அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மான் அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் இருந்து வழிதவறி வந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்ய மத அடிப்படையில் உரிமை உண்டு என்று ஜி.ஆர் சாமிநாதன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

குன்னூர் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் அன்னலட்சுமி டீக்கடையில் தவறவிட்ட ரூபாய் 26,100 ஐ கடையின் உரிமையாளர் அதிமுக நிர்வாகி எல். மணி அவர்கள் எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் டீக்கடையில் பணத்தை தவறவிட்ட பாரதி நகரை சேர்ந்த சேகர் என்பவரிடம் காவல்துறையினர் பணத்தை ஒப்படைத்தனர். எல்.மணி அதிமுக Ex பால்வள தலைவராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.