India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்ட காவல் துறையில் இயங்கிவரும் வெடிகுண்டு துப்பறியும் (ம)அகற்றும் படையினர் மோப்பநாய் உதவியுடன் சமயபுரம், லால்குடி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் SGM ரமேஷை ஆதரித்து நாளை (08.04.24) திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றார். இதில் திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் வெங்கமேடைச் சேர்ந்தவர் சூசை கண்ணு(68). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கேஸ் அடுப்பில் உணவு சமைத்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வரும் அர்ஜுன் கௌதமிடம் மஹா.,வை சேர்ந்த அங்கீத், துஷார் பவார், சங்கீத் பன்சால், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். பாண்டுரங்கனை தவிர மற்ற மூவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுள்ளனர். சந்தேகமடைந்த கௌதம் கடையின் இருப்பை சோதித்த போது 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகை நகராட்சியில் வசிக்கும் வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை ஏப்.,30 -க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக செலுத்துபவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக 5 சதவிகிதம் வழங்கப்படும். மேலும், சொத்து உரிமையாளர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் நகராட்சி வரிவசூல் மையம் செயல்படும் என்று ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர், சேப்பாக்கம், எழும்பூர், பெசன்ட் நகர் பகுதியில் இன்று காலை முதலே பறக்கும் படை சோதனை நடைபெறுகிறது. நேற்று இரவு ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 2 லட்சத்து 74 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.19 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22% அதிகம் என நேற்று(ஏப்.6) தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று(ஏப்.6) மாவட்டத்திலுள்ள வெடிகுண்டு துப்பறிதல் மற்றும் அகற்றும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதலாக 20 நபர்களுக்கு வெடிகுண்டு துப்பறிதல் மற்றும் அகற்றும் படையினரால் தீவிர செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(ஏப்.7) தொடங்கியது. இந்த சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழவான தோராட்டம , விழாவின் 15வது நாள், அதாவது வருகிற 20ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.