India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்துமிடத்தில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக பந்தல் அமைத்து உள்ளனர். இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா வழிகாட்டுதல் படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு இன்று மத்திய அரசின் காயகல்ப விருது ரூ.2 லட்சம் பரிசும் அறிவித்துள்ளது.

சிவகாசியில் கடந்த 1997-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு சிவகாசி- எரிச்சநத்தம் ரோட்டில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை சார்பில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வருகின்ற மே 11ஆம் தேதி பாத்திமா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கு பெற மேலப்பாளையம் கல்வி அறிஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று (மே 8) அழைப்பு விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 20 மனுதாரர்களிடம் நேரடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாலாஜாபேட்டையில் அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வீடியோ கேமராக்கள் முறையாக இயங்குவதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் (Strong Room) பாதுகாப்பையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ச.வளர்மதி இன்று (மே.08) பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குருவிமலை – காலூர் சாலையில் செய்யாற்றின் குறுக்கே ரூ. 9.21 கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தீரஜ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து 10 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவரது மகன்களிடம் திசையன்விளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் தூணில் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிரான்ஸ் அரசு சார்பில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் ழான் பிலிப் உத்தர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.