India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சில மின்சார ரயில்களின் சேவை நாளை(மே 12) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பயண திட்டங்களை அமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை முடிக்காத போர் மேன்கள் கண்காணிப்பாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது தெரிந்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி மாணவி பா.கிருத்திகா தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு தனது பாராட்டினை தெரிவித்தாா். மாணவி கிருத்திகாவின் தந்தை பாலசுப்பிரமணியன் வாடகை சரக்கு வாகன ஓட்டுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி கனவு என்ற சிறப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு பாளை நேரு சிறுவர் கலை அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார். போலீஸ் கமிஷனர் மூர்த்தி புத்தகத்தை வெளியிடுகிறார் உயர் கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சிறப்பு கண்காட்சியும் நடைபெறுகிறது.

உதவி பேராசிரியர் பணிக்கான டி.என்.செட் தேர்வு ஜூன் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 என நெல்லை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த தேதியை தற்போது மே 15ஆம் தேதி மாலை 5 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழகச் பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.

12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பாளை மகாராஜநகர் ஜெயேந்திர சில்வர் ஜீப்ளி பள்ளி மாணவர்கள் கடந்த 5 வருடங்களாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வந்தனர். ஆனால் இந்த வருடம் 12 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெறாததால் இந்த சாதனையை தக்க வைக்க முடியவில்லை. இந்தப் பள்ளியின் சாதனை கை நழுவிப்போனது.

சென்னையில் மசாஜ் என்ற பெயரில் ஆங்காங்கே பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மசாஜ் சென்டர்களில் ரகசியமாக ஆய்வு செய்து வருகின்றனர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று(மே 10) சோதனை செய்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றும் (மே 11), நாளையும் (மே 12) நடக்கும் மூன்று போட்டியில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்ச் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் பார்வையிட சிறப்பு ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டியை காண வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் என பிசிசிஐ பிரதிநிதி இர்பான் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சார்பில் புனித ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் முகாம் நலவழித்துறை கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர் தேனாம்பிகை முன்னிலை வகித்தார். முகாமில் காரைக்காலை சேர்ந்த 28 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.