Tamilnadu

News March 27, 2024

திருப்பத்தூர்: அம்மையப்ப நகரில் கும்பாபிஷேக திருவிழா

image

நாட்றம்பள்ளி தாலுகா கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கசிநாயகன்பட்டியை அடுத்த முருகப்ப நகரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. வேத பண்டிதர்களால் யாக சாலை அமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாக்குழுவினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன

News March 27, 2024

உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 26) திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் இருந்தது.

News March 27, 2024

புதுகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை ,பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 47 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த கற்பித்தல் மையங்களில் கற்பித்தல் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி வட்டார வளமையத்தில் 26.3.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாஹி ஜான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

News March 27, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

image

ஏப்ரல்-19ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட முத்துப்பேட்டை, தலையாமங்கலம், கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேற்று (26.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

News March 27, 2024

சென்னை: I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூர் எவர் வின் பள்ளி வளாகத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிடோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

News March 27, 2024

விழுப்புரம்: 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியோர் இவ்வளவா?

image

தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 126 தோ்வு மையங்களில் 12,617 மாணவா்கள், 11,911 மாணவிகள் என மொத்தமாக 24,528 போ் தோ்வு எழுதினா். முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மொத்தம் 2021 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

News March 27, 2024

வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல் 

image

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை ரத்துசெய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடை முறைப்படுத்த வலியுறுத்தி மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். சகோதரிகளான இருவரும் பலவேறு சமூகப் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

நெல்லை பாஜக வேட்பாளர் சூளுரை

image

நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று (மார்ச் 27) செய்தியாளரிடம் கூறும்போது, இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். நான் வெற்றிபெறும் பட்சத்தில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக நெல்லை தொகுதியை மாற்றிக் காட்டுவேன், ஒரு சட்டசபை தொகுதிக்கு மட்டும் செய்துவந்த மக்கள் பணி ஆறு தொகுதிகளுக்கும் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்று கூறினார்.

News March 27, 2024

நாமக்கல்: பாவை கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு

image

நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் சேவை அமைப்பின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி உறுதி ஏற்பு இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நாமக்கல் ராசிபுரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பாவை கல்லூரி முதல்வர் தேசிய சேவை இளையோர் தொண்டர் ஷா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

இதுவரை ரூ.2.9 கோடி பணம் பறிமுதல்

image

மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு எடுத்து வரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.2,09,46,060 பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!