India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (53). இவருக்கு பெண் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஏப்ரல் 7) சிறையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த சிறை காவலர்கள் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை பலப்படுத்தி உள்ளனர். பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவுபடி நேற்று (ஏப்.7) களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் பகுதியில் மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் முன்னெச்சரிக்கையாக தீவிர சோதனை நடத்தினர்.

வாணியம்பாடி அடுத்த காவாய் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவர் நேற்று விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணி அளவில் புல்லூர் அடுத்த கனக நாச்சி அம்மன் ஆலயம் பாலாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்த 534 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக நேற்று ஆட்சியரின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருவிழா, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக்கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். தீா்த்தக்காவடி எடுத்து வந்த பக்தா்களுக்கு கோயில் சாா்பில் தரிசனத்துக்கு தனிவழி அமைக்கப்பட்டிருந்தது. பழனி கிரிவீதியில் பேட்டரி காா்கள் இயக்கும் பேருந்து பற்றாக்குறையாக இருந்ததால், விடுமுறை நாள்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

குமரி: பளுகல் சோதனை சாவடியில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு பெனடிக் ராஜ் நிலைதடுமாறி ஓடையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை
சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லங்கோடு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று(மே.7) திருவையாறு பகுதியில் உள்ள தில்லைஸ்தானம், கண்டியூர் உள்பட முக்கிய இடங்களில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர், ஏட்டு பார்த்திபன் மற்றும் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(ஏப்.8) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து உள்ளதாக பெருநகர சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செந்துறை அண்ணா நகர் பகுதி பேருந்து நிலையம் அருகில் நேற்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானது. இதில் சேடக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஊராட்சியில் உள்ள ஜீவா நகர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் ஜீவா நகர் கிராமத்தை சேர்ந்த அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் அனைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.