India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சத்திரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. இதற்காக இங்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரவிலும் பகல் போல் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்களித்த ஒருவர் அதனை போட்டோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மக்களவை தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மதியம் 1:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 44.63%, உசிலம்பட்டி 42.82%, ஆண்டிபட்டி 36.04%, பெரியகுளம் 39.86%, போடிநாயக்கனூர் 44.74%, கம்பம் 40.3% என மொத்தமாக 41.28% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர், கிளியனூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மதிய நேரத்தில் வெயில் தாக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் 4 மணிக்கு மேல் வாக்காளர்கள் குவிந்ததால் வாக்குச்சாவடிகள் நிரம்பியது. குறைவான நேரம் என்பதால் வாக்குச்சாவடி ஊழியர்களும் முகவர்களும் திணறினர்.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 63.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 60% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைப் தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தொகுதி நடுக்குப்பம் கிராம மக்கள் காலையில் தேர்தலை புறக்கணித்த நிலையில் தற்போது வாக்களிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரவுபதி அம்மன் கோயில் பிரச்னையால் தேர்தலை புறக்கணித்த மக்கள் வாக்களிக்க திரண்டனர். மேலும், ஒரே நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவானது 5 மணி நிலவரப்படி 65.33% வாக்கு பதிவு ஆகி உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 6மணி வரையில்தான் வாக்குப்பதிவானது நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ஆளுங்கட்சியை சார்ந்த மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் மீறப்படுகிறது. இது சம்பந்தமான அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.