India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்புண்டி புதிய கணினியை சேர்ந்த ஆறுமுகம் (22) நேற்று (ஏப்ரல் 9) சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

குளச்சல் அருகே உள்ள சாஸ்தான் கரை பகுதியை சேர்ந்தவர் கார்லுஸ். நில புரோக்கரான இவர் நில விற்பனையில் கிடைத்த 3 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படைக்கு பயந்து வங்கிக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். அவர் கொடுத்த புகாரின்பேரில், சிசிடிவியில் பதிவான 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு குளச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.

காங்கேயம் திருவிக நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சபரி விஜய், கணேஷ் ஆகிய இரண்டு பேர் வாடகைக்கு குடிவந்துள்ளனர். குடி வந்த நாட்களில் இருந்து அந்த வீட்டிற்கு அடிக்கடி பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் பாலியல் தொழில் தரகர்களான அவர்கள் இருவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த கனகவேல் தனது குடும்பத்தினுடன் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை மதுரை நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது கள்ளிக்குடி அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 5 கி.மீ சுற்றளவிற்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உலக புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா நேற்று மாலை சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23ஆம் தேதியும், சித்திரை தேரோட்டம் 24 ஆம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களை தேர்வு செய்யும் பணி ரிப்பன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்டத்தில் உள்ள 11.56 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவர் நேற்று (ஏப்.9) ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கை சின்னத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டார். அப்பொழுது இரவில் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தனர்.

தஞ்சை தாலுகா காவல் நிலையத்திற்கு நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அதில் தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குரு பரிகார தல மாக விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிதியை தவறான வழியில் செலவு செய்த கோவில் செயல் அலுவலர் அதை கண்காணிக்க தவறிய இணை ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட தேவன் 1 கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 90, 91 இதுவரை அதே பகுதியில் செயல்பட்டுவந்தது. சில நிர்வாக காரணங்களால் 90ஆம் வாக்குச்சாவடி மேஃபீல்டுக்கும், 91ஆம் சாவடி கொட்டமெடு பள்ளிகளுக்கும் மாற்றப்பட்டது. இதனால் 600 வாக்காளர்கள் உள்ள இப்பகுதி மக்கள் 6 கிமீ தூரம் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.