Tamilnadu

News April 10, 2024

நெல்லையில் ட்ரோன் பறக்க தடை விதித்த ஆணையாளர்

image

நெல்லையில் வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக நெல்லை மாநகர் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று (ஏப்.10) உத்தரவிட்டுள்ளார்.

News April 10, 2024

நெல்லை முபாரக் இரங்கல்

image

நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் மகன் டாக்டர் ரவீந்திரன் மற்றும் மருமகள் டாக்டர் ரமணி ஆகியோர் நேற்று (ஏப்.9) கயத்தாறு அருகே நடந்த வாகன விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்

image

திமுக வேட்பாளா் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா், நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமையில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் சேர்ந்த மற்றொரு பிரிவினர் 15க்கும் மேற்பட்டோர் பார்த்தசாரதி, விமல் உள்ளிட்ட பலரை உருட்டு கட்டையால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 10, 2024

200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நக்கசேலம் பகுதியில் (ஏப்ரல் 9) நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில், மத்திய துணை காவல் படையினர் மாவட்ட காவலர்களுடன் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

News April 10, 2024

குமரி: பெண் ஒருவர் திடீர் தர்ணா போராட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திடீரென பெண் ஒருவர் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு எனக்கு நீதி வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பெண்ணிடம் கேட்டதற்கு கலெக்டர் நேரில் என்னிடம் வந்து கேட்டால் தான் கூறுவேன் என அடம்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 10, 2024

வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த எம்எல்ஏ

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் அம்மன் குளம் அருகே உள்ள அண்ணா பூங்காவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோர வடை கடையில் வடை போட்டு கொடுத்து நூதன முறையில் உதய சூரியன் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 10, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

பாலக்கோடு கிழக்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்களின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, தர்மபுரி தொகுதி திமுக பார்வையாளர் த.ஆ.கா தருண் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2024

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 25 கேமராக்கள்

image

தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 10, 2024

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை: சிறப்பு தொழுகை

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று இரவு பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!