India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமதலங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீரர் ஜெயந்தி (21.04.2024) (ஞாயிற்று கிழமை) மற்றும் மே தினம் (01.05.2024) (புதன் கிழமை) ஆகியவற்றை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களுக்கு உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொட்டல்காடு அருகே உள்ள டீ கடை முன்பு சட்ட விரோதமாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பிரேம்குமார்(19) என்பவரிடம் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க சென்ற டீக்கடையை சேர்ந்த வேல்ராஜ்(45) என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.

பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவுக்காக கடந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று (ஏப். 20) அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை, பாளை கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. ஓட்டு பதிவுக்கு குறைவாக வந்த வாக்காளர்கள் டாஸ்மாக் மதுபான கடைக்கு அதிக அளவில் வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செங்கலத்துப்பாடி மலை கிராம மக்கள் மயான வசதிக் கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இம்மக்கள் நேற்று தேர்தலைப் புறக்கணித்ததால் அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவானது. 336 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 139 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைவுநிலை (LKG) வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் 1889 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை rte.tnschools.gov.in இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டங்களின் ஆந்திர எல்லையோர பகுதிகள் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோடைகால வெயில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி இ.காட்டூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 826 பேர் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையானது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.