Tamilnadu

News May 16, 2024

திருவாரூரில் பெய்த மழை அளவு விவரம்.

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மன்னார்குடியில் 13 செ.மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 6 செ.மீட்டரும், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, குடைவாசல் ஆகிய பகுதிகள் 5 செ.மீட்டரும், வலங்கைமானில் 4 செ.மீட்டரும், திருவாரூர், திருவாரூர் AWS ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

News May 16, 2024

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

image

திண்டுக்கல் பிஎன்சி தா்ம சாஸ்தா அறக்கட்டளை சாா்பில், வசதி வாய்ப்பற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெற விரும்பும் மாணவா்கள், தங்களது கல்வி விவரம், பெற்றோரின் பணி விவரங்கள், மதிப்பெண்கள் பட்டியலுடன் விண்ணப்பத்தினை ஜூன் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87620 13767 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

சிவகங்கை மழை அளவு விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று(மே 15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கம்புணரியில் 14 செ.மீட்டரும், திருப்புவனம் பகுதியில் 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கோடை தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

தந்தையை தாக்கிய வழக்கில் மகனின் ஜாமின் மனு தள்ளுபடி

image

பெரம்பலூர், கிருஷ்ணாபுரத்தில் ரைஸ் மில் அதிபர் குழந்தைவேல், அவரது மகன் சக்திவேல் இடையேசொத்து தகராறு இருந்தது. இதனால் தந்தையை, மகன் தாக்கியுள்ளார்.இத்தாக்குதல் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால்வி.களத்தூர் போலீஸார் சக்திவேலை சிறையில் அடைத்தனர். ஜாமின் கேட்டு சக்திவேல் நேற்று மனு தாக்கல் செய்தார் மனுவை தள்ளுபடி செய்து பெரம்பலூர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

News May 16, 2024

புதிய கிணறு கட்டடப்பணி:  ஆட்சியர் பழனி ஆய்வு

image

விழுப்புரம் அருகே முகையூர் கிராமத்தில் அருகில் உள்ள வீரங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

News May 16, 2024

பனைமரத்தின் மீது கார் மோதி விபத்து

image

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை- மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் கணேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

News May 16, 2024

கலசப்பாக்கம்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

image

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 16, 2024

நாளை முதல் அழகை ரசிக்க தயாராகுங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கொடைக்கானல் கோடை விழா நாளை (மே-17) பிரையன்ட் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் தொடங்க உள்ளது.

News May 16, 2024

குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

image

கன்னியாகுமரி, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள புது குடியிருப்பு சுப்பையார்குளத்தில்   கேரள மாநிலம் பாறசாலை சேர்ந்த நபர் நேற்று இரவு தன்னுடைய உடமைகளை படித்துறையில் வைத்து விட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கியவர் நீரில் மூழ்கி பலியானர். இதனையடுத்து தீயணைப்புதுறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 16, 2024

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

image

குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம்  பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58)  மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!