India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கோவிலானூர் ஜி. மணிகண்டன் தலைமையில், பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மார்ச்.26 திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் செய்து வருகிறார்.

இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நாடாளுமன்றத் தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை சார்பாக நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து கழக நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழனி அடிவாரம் குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனிமேடையில் இன்று(மார்ச்.22) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தம்பதி சமேதராக சுவாமி, வெள்ளித்தேரில் சந்நிதி வீதி, ரதவீதிகளில் உலா எழுந்தருளுகிறார். நாளை(மார்ச்.23) மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் இன்றைக்குப் பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடலூர் டவுன்ஹால் அருகே 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின்
வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (22.03.2024) ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
இராஜசேகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நம் பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் சென்றடைந்தார். இதனை அடுத்து கோவிலில் இன்று வருடத்திற்கு ஒருமுறை நிகழும் சேர்த்தி சிறப்பு சேவை நடைபெற்றது. இதனை ஒட்டி நம் பெருமாள் மற்றும் கமலவல்லி நாச்சியார் இருவரும் இணைந்து கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.

திருச்சி சிறுகனூர் பகுதியில் திருச்சி மக்களவை தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதை முன்னிட்டு உரையை தொடங்குவதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன், பெரியார் மற்றும் அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உரை நிகழ்த்தினார்.

திருச்சி மாவட்டத்தில் திமுக பிரச்சாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இன்று திருச்சியை நோக்கி படையெடுத்து வந்தனர். இதையடுத்து பிரச்சார திடலில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் தொண்டர்களால் ஆக்கிரமிப்பு செய்து சிறுகனூர் பகுதி முழுதும் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது.
Sorry, no posts matched your criteria.