Tamilnadu

News March 20, 2024

புதிதாக துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிதாக துணை கண்காணிப்பாராக சூரக்குமரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போடு காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News March 20, 2024

ஈரோட்டு: டிராக்டரை சேதப்படுத்திய காட்டு யானை

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

News March 20, 2024

கடலூரில் வரும் 5-ஆம் தேதி ஸ்டாலின் பிரச்சாரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News March 20, 2024

பொன்முடியிடம் வாழ்த்து பெற்ற திருமா

image

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட உள்ளார். இதனையடுத்து அவர் இன்று காலை (மார்ச் 20) முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விழுப்புரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News March 20, 2024

திருச்சியில் 22 ஆம் தேதி முதல்வர் பரப்புரை

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலும், நாகை, குமரியில் மார்ச்.23ஆம் தேதியும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் வரும் 26 ஆம் தேதியும் தேர்தல் பரப்புரை மேற்க்கொள்ளப் போகிறார்.

News March 20, 2024

தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின்

image

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல்19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மார்ச் 23ம் தேதி தஞ்சையில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

News March 20, 2024

மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை.

image

திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூந்தோட்டம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் அவர் உயிரிழந்ததிலிருந்து ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 20, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

News March 20, 2024

தேர்தல்: சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம், தபால் வாக்கு அளிக்க படிவம் 12டி மார்ச் 21,22 தேதியில் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

கோவை தேர்தல் பற்றி புகார் அளிக்க தொலைபேசி எண்

image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமான தங்கள் புகார்களை 0422-2967797, 0422-2967737, 0422-2967785, 0422-2963430 என்ற எண்களுக்கும்1800-425-1215 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி இன்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!