Tamilnadu

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே பரபரப்பு

image

வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது 17 வயது மகள் பல்லவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த பல்லவியின் பெற்றோர் இன்று அம்பலூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News March 23, 2024

செங்கல்பட்டு: பங்குனி உத்திர திருவிழா

image

மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரு கருணை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

News March 23, 2024

அண்ணாமலை 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

image

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இதில் வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

News March 23, 2024

தி.மலை: சிறுமி கர்ப்பம்: கொடூரம்

image

செய்யாறு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னராசு என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், மாணவி கர்ப்பமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னராசுவை தேடி வருகின்றனர். இவர் 2 குழந்தைக்கு தந்தை என்பதும் மாணவிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்துள்ளது. 

News March 23, 2024

சென்னையில் மர்ம பொருள் வெடிப்பு: பீதியில் மக்கள்

image

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்ய பிரணவ் என்ற பிளஸ் டூ மாணவர் நேற்று முன்தினம் வேதிப்பொருள்களை பயன்படுத்திய போது வெடி விபத்து ஏற்ப்பட்டது. இதில் அந்த மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

News March 23, 2024

ஸ்டாலினை பார்த்ததுமே.. பூரித்த தஞ்சாவூர்!

image

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

News March 23, 2024

நாமக்கல் அருகே 29 கிலோ தங்கம்

image

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இன்று ஒப்படைத்தனர். இதுகுறித்தது போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 23, 2024

திண்டுக்கல்: போஸ்டரால் பரபரப்பு

image

குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தேர்தலை புறக்கணிப்பதாக அச்சிடப்பட்டுள்ளது.

News March 23, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 நபர்களை கைது செய்யப்பட்டும், 3,663 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.2,34,552/- என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

மதுரை டூ போடி வரை மின்சார ரயில்

image

மதுரை – போடி வரை சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று (மார்ச் 23) ரயில்வே அதிகாரிகள் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை இருப்புப் பாதைகளை ஆய்வு செய்தனர். விரைவில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!