India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசன் இன்று (25.3.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி நாளை (மார்ச் 026) காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடியில் மீண்டும் 2வது முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இன்று காலை அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே, தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து
சேலம் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பயிலும் 22089 மாணவர்கள், 21181 மாணவிகள் என மொத்தம் 43270 பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 184 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் இழுப்பறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது ராப்ர்ட் புரூஸ் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை, கன்னியாகுமரி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்., சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிடுவதாக சன்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் சேவகி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது சேலம் திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஆரணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் படிவத்தை வழங்கினார். இந்த வேட்புமனு தாக்கலின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை கச்சராப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தில் பால், தயிர், இளநீர், மஞ்சள் குங்குமம் சந்தனம் மற்றும் வாசனை திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நேர்த்திக்கடனாக அழகு குத்தி , காவடி தூக்கி வழிபட்டனர். கொழுக்கட்டை சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேனியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏ மகாராஜன் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் மாநில துணை பொதுசெயலாளர் யாக்கூப் தலைமையில் 6 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.