Tamilnadu

News April 13, 2024

மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

image

புளியங்குடி இந்திரா காலணியில் மது பாட்டில்கள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த புளியங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராமையா மகன் கார்த்தி (22) என்பவரை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூபாய் 18000 மதிப்புள்ள 92 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 13, 2024

அரசுக்கும் மக்களுக்கு பாலமாக இருப்பேன்-ராதிகா

image

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் நேற்று மாலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பேசிய அவர், “மத்தியில் நிச்சயம் மீண்டும் 3 ஆவது முறையாக மோடி ஆட்சி அமைப்பார். எனவே, மக்களுக்கான திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுப்பதில் பாலமாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.

News April 13, 2024

கள்ளக்குறிச்சி :உலக சுகாதார தின விழா

image

இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டில் உலக சுகாதார தின விழா  நேற்று கொண்டாடப்பட்டது. ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் தே.கோவிந்தராஜு, இயக்குநர்கள் ம.மனோபாலா, ம.சிஞ்சு, ஆனந் ராம்பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஹெல்த் சயின்ஸ் முதலாமாண்டு மாணவி கரிஷ்மா வரவேற்றார்.

News April 13, 2024

திருமயத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை ரத்து

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார். முன்னதாக அவர் மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வந்து இங்குள்ள கோட்டை காலபைரவர் கோயில், சத்தியவாகீஸ்வரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை திருமயம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

News April 13, 2024

விழுப்புரம் அருகே இளம் பெண் மாயம்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் அருகே கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவரது மகள் சகிலா (22). இவர் கடந்த 4 நாள்களாக காணவில்லை என அவரது தந்தை ராமலிங்கம் நேற்று (ஏப்ரல் 12) புகார் அளித்துள்ளார். 4 நாள்களுக்கு முன்பு கடை வீதிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் ராமலிங்கம் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News April 13, 2024

நல்லம்பள்ளி திமுகவினர் பரப்புரை

image

தர்மபுரி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் திமுக தேர்தல் பரப்புரை நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நட்சத்திர பேச்சாளர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணியை ஆதரித்து தமிழக அரசின் நலத்திட்டங்கள் சாதனைகள் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

News April 13, 2024

கஞ்சாவுடன் சுற்றி திரிந்த இளைஞர் கைது

image

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றி திரிந்த பார்த்திபன்(26) என்பவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 13, 2024

தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

image

தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கும்பகோணம் தபால் கோட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.

News April 13, 2024

வேலூர் காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 12) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 60 லிட்டர் கள்ளச்சாராயம், 43 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News April 13, 2024

தக்கலையில் இன்று அமித்ஷா “ரோடு ஷோ”

image

பாஜக சார்பில் போட்டியிடுகின்ற கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இன்று காலை தக்கலை பகுதியில் “ரோடு ஷோ” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

error: Content is protected !!