Tamilnadu

News April 11, 2024

ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

image

வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் ஈத்கா மைதானத்தில் ஏராளமான இசுலாமியர்கள் ஒன்று கூடி இன்று ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் வந்தவாசி பகுதியின் பல்வேறு இடங்களில் தொழுகை நடைபெற்றது

News April 11, 2024

வைத்தீஸ்வரன் கோவிலில் கார்த்திகை வழிபாடு

image

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத கார்த்திகை ஒட்டி இன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு 21 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் சண்முகார்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 11, 2024

ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறிய மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ரம்ஜானை முன்னிட்டு இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள். இந்நாள் போல் எந்நாளும் இஸ்லாம் பெருங்குடி மக்கள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும். மேலும், ஒவ்வொரு இஸ்லாமியர்களும் சாதி மத பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” குறிப்பிட்டுள்ளார்.

News April 11, 2024

நாட்றம்பள்ளி: கட்சி பேனர் அகற்றம்

image

நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பாஜக கிழக்கு ஒன்றிய அலுவலகம் எதிரில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர் தேர்தல் விதிகளுக்கு உட்படாமல் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கட்சி பேனர் அகற்றப்பட்டது.

News April 11, 2024

சிவகங்கை; பெருமாள் கோயிலில் வழிபாடு செய்யும் அமித் ஷா

image

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நாளை சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து காரைக்குடியில் மேற்கொள்ளவிருந்த சாலை பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமயம் கோட்டை பெருமாள் கோவிலில் அவர் வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 11, 2024

ஜெகதாபட்டினத்தில் வாக்கு சேகரித்த ஓபிஎஸ்!

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெகதாபட்டணத்தில் கூடியிருந்த பொதுமக்களிடையே பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி உடனிருந்தார்.

News April 11, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் அவசரக்கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட மா சாகுபடி விவசாயிகள் அவசர கூட்டம் இன்று நடந்தது. மழை இல்லாததால் மா விளைச்சல் வெகுவாக பாதிப்படைந்துள்ளதால் ஏரி குளங்களிலுள்ள தண்ணீரை டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து மா மரங்களுக்கு ஊற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மா மரங்கள் காய்ந்து போனதால் அதற்கேற்றபடி ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

News April 11, 2024

நரிக்குறவர் பெண்ணுக்கு கலெக்டர் கிரீடம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் ஆசாக்குளம் நரிக்குறவர்கள் வசிக்கும் இருப்பிடத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நரிக்குறவர் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் கலெக்டருமான பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உட்பட கலந்து கொண்டனர்.

News April 11, 2024

அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

கொடுமுடி அருகே தளுவம்பாளையம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே அழுகிய நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம்  கிடப்பதாக நேற்று கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இறந்த நபர் குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2024

மது பாட்டில்கள் விற்பனை செய்தவருக்கு போலீசார் வலை

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்ற போது தப்பியோடினார். இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 43 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!