Tamilnadu

News April 9, 2024

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

image

இன்று தர்மபுரி மாவட்டம் கூத்தமடை காலனி பகுதியைச் சார்ந்த ராசாத்தி (23) அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் தர்மபுரி 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது ராசாத்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சசிகலா ராசாத்திக்கு பிரசவம் பார்த்தார். அதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அவசரகால ஓட்டுநர் இளையராஜா பத்திரமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News April 9, 2024

திண்டுக்கல்: பிரச்சார மேடையால் பாதிப்பு

image

திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் எடப்பாடி பழனிச்சாமி இன்று எஸ்டிபி கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் போடப்பட்ட மேடையால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

News April 9, 2024

திருச்சியில் மின் பயன்பாடு 30 சதவீதம் அதிகரிப்பு

image

திருச்சி மாநகரில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் புழுக்கமான வானிலைக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் குளிரூட்டிகள் மற்றும் பிற மின்சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மின்சார நுகர்வு 30% அதிகரித்துள்ளது.
இது குறித்து மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தேர்தல்-தேர்வுகள் முடிந்ததும் பராமரிப்பு பணி மீண்டும் துவக்கப்படும் என்றார்.

News April 9, 2024

தென்காசி: தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

image

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல் வலியுறுத்தி தென்காசியில் உள்ள அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கி ஸ்டிக்கர் ஒட்டும் பணி இன்று நடைபெற்றது. கீழப்பாவூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் சிவக்குமார் மாரீஸ்வரன் பங்கேற்றனர்.

News April 9, 2024

நாமக்கல்: திமுக வெற்றி அடையும்

image

நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் செயலாளரும் தெரிவிக்கும் போது நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைவார் என ஈஸ்வரன் தெரிவித்தார் .மேலும் இந்திய கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார்

News April 9, 2024

கிருஷ்ணகிரி : வேட்பாளருக்கு மலர் தூவி வரவேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர்
திரு. வி. ஜெயபிரகாஷ் அவர்கள் இன்று (ஏப்ரல்.9) காவேரிப்பட்டினம் திம்மாபுரம் நெடுங்கல் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பகுதி அதிமுக கழகத் தொண்டர்கள் வேட்பாளருக்கு மலர் தூவி வாணவேடிக்கைகள் வைத்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

News April 9, 2024

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் தசரத நகரில் தனியாக வசித்து வருபவர் சரஸ்வதி (72). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு தனது மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் இரவு மர்ம நபர்கள் மூதாட்டியின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே வீட்டின் பூட்டை உடைக்க முடியாத நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2024

பொய் வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பு

image

தன் மீது பதியப்பட்ட பொய் கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை காவல் ஆய்வாளர் பூமிநாதன், எஸ்ஐ பேரரசி ஆகியோர் நேர்மையாக நடத்தவில்லை, காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது என்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

News April 9, 2024

விருதுநகரில் தீ பற்றி எரிந்த 7 வீடுகள்

image

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் சண்முகையா (70). இவருக்கு சொந்தமாக 7 தகர சீட் போட்ட குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் இன்று வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது.இதுகுறித்து தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரு விபத்து தவிர்க்கப்பட்டது.இச்சம்பவம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 9, 2024

புதுச்சேரியில் ஏப்ரல்.17, 18ல் விடுமுறை

image

புதுச்சேரியில் ஏப்ரல்.17 மற்றும் 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிகளுக்கு தேர்தலுக்கு முன்பு கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!